சமந்தா நாக சைதன்யா பேட்ச் அப் ஆகலயாம்

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒன்றாக சேர்ந்து விட்டதாகவும், அவர்களுக்குள் பேச்சுப் நடந்தது ஹாஸ் என்ற நாயின் புகைப்படம் மூலம் தெரிய வந்ததாக பலரும் கூறியிருந்தனர். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் தரப்பில் இருவருக்கும் திருமணங்கள் நடைபெற்றன.

சில ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இருவரும் விவாகரத்து வாங்கிவிட்டதாகவும் கூட சொல்லப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த சமந்தா தன்னையும் நாக சைதன்யாவையும் ஒன்றாக ஒரே அறையில் வைத்து இருந்தால் அந்த அறையில் கத்தி வைத்திருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அது தனக்கு ஆபத்தான முடியும்” என்று கூறியிருந்தார்.

எனவே அவர்களுக்குள் பாதுகாப்பு குறைபாடு இருப்பதே பிரிவுக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது. இருவரும் சேர்ந்து விட்டனர் பிரிந்து விட்டனர் என பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் அவர்களாக எதுவும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அவர்கள் இருவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து ஏற்கனவே நீக்கி இருந்தனர். அதில் ஒரு சில புகைப்படங்கள் மீண்டும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவதன் மூலம் இருவரும் இணைந்து விட்டதாக கூட செய்திகள் கசிந்தன.

பேட்ச் அப் யூகம் பின்னணி என்ன?

நாக சைதன்யாவும் சமந்தாவும் ஒன்றாக இருக்கும்போது வாங்கப்பட்ட நாயின் பெயர்தான் ஹாஷ். அதை தங்களது குழந்தை போல் பாவித்தனர். விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாவின் பல இன்ஸ்டாகிராம் போஸ்ட்களில் ஹாஷ் என்ற நாய்க்குட்டியின் புகைப்படங்கள் இடம் பெற்றன.

இந்த நிலையில் அதே ஹாஸ் என்ற நாயுடன் டைம்ஸ் ஸ்பென்ட் செய்வதாக நாக சைதன்யா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். இந்த பப்பி நாக சைதன்யாவிடம் இருப்பது கண்டு இருவரும் பேட்ச் அப் ஆகிவிட்டதாகவும் பல தகவல்கள் வந்தன.

ஆனால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிக்கைக்கு அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதன்படி “சமந்தாவும் நாக சைத்தன்யாவும் இணைந்து ஒன்றாக வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டு அமைதி உடன்படிக்கைக்கு வந்து விட்டனர். அவர்கள் வாழ்ந்த நாட்களை மட்டும் எண்ணி மகிழ்ச்சியடைய இருவரும் முடிவெடுத்தனர். இரு தரப்பு வீட்டில் இருந்தும் அவர்களை இணைத்து வைக்கும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது மட்டுமில்லாமல் இது குடும்பத்தினரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பதால் அவர்கள் இதில் தலையிடவில்லை. ”

மேலும் “சமந்தாவும் அவரது உடல்நலம், உலக சுற்றுலா என்று பிஸியாக இருக்கிறார். நாகச சைத்தன்யாவும் அவரது வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார். இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை” என்றும் அவர் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.