2 நாள்ல ரூ.1000 வருது. உடனே இத பண்ணுங்க -அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் பணம் வழங்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 என குடும்ப தலைவிகளின் உரிமை தொகையாக இந்த பணம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு தவணை வழங்கப்பட்டு விட்ட நிலையில் 2-வது தவணை பணம் வழங்குவதற்கான நாளும் நெருங்கி விட்டது.

இந்த திட்டத்தை வழங்க நிதி சிக்கல் நிறைய இருந்தது. இந்நிலையில் வெறுமனே திட்டமிடாமல் முறையாக திட்டமிட்டு பக்காவாக இந்த பணம் மக்களை போய் சேர வேண்டும் என முடிவெடுத்தார் முதல்வர். அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே பணம் பெண்களின் வங்கி கணக்குக்கு சென்று சேர்ந்த நிலையில் பலரும் அதை கொண்டாடினர். ஒரு சிலர் இன்னும் தகுதி இருந்தும் தங்களுக்கு பணம் வரவில்லை எனக் கூறி மேல்முறையீடு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த விண்ணப்பங்கள் சரி செய்யப்பட்டு மொத்தமாக தேர்வானவர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. இதை அடுத்து ஏற்கனவே பணம் வாங்கியவர்களுக்கும் மேல்முறையீட்டில் விண்ணப்பித்து தேர்வானவர்களுக்கும் வரும் 14ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும். தகுதியிருந்தும் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அது தொடர்பான ஏடிஎம் கார்டு பெற்றிருந்தால் அவர்கள் தபால் அலுவலகங்களில் சென்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அல்லது மணி ஆர்டர் மூலம் வீடு தேடி பணம் வரும். கடந்த முறை வந்தது போலவே இதையும் எதிர்பார்க்கலாம்.

பணம் கடந்த மாதம் கொடுக்கப்பட்டு இருந்தும், இந்த மாதம் கொடுக்கப்படவில்லை என்றால், உள்ளூர் கிராம அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்து அந்த அதிகாரியிடமே கூறலாம். மேல்முறையீடு செய்து தகுதி பெற்று இருந்தால் அதற்கான மெசேஜ் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்திருக்கும். தகுதி பெறவில்லை என்றாலும் இனி நீங்கள் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது அர்த்தமாகிவிடும்.

இந்த திட்டத்தில் கடந்த மாதம் பணம் போட்டபோது வங்கிகள் மினிமம் பேலன்ஸ்காக பணத்தை எடுத்து விட்டதாக நீங்கள் கருதினால் இந்த மாதம் அவ்வாறு எடுக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஏற்கனவே 1000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக அவர்கள் எடுத்திருப்பார்கள். அதுமட்டுமின்றி வங்கிகள் பணம் பிடித்தம் செய்யக்கூடாது என்று முதல்வரும் உத்தரவிட்டுள்ளார்.

அதையும் மீறி அவர்கள் வங்கி கணக்கில் இருந்து மினிமம் பேலன்ஸ்காக பணம் எடுக்கப்பட்டு விடுமோ என அஞ்சுபவர்கள் தங்கள் வங்கி கணக்கில் வரவுள்ள ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு நம்பகத் தகுந்த நபர்களின் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம். அல்லது வங்கிக்கு சென்றோ, ஏடிஎம்க்கு சென்றோ பணமாகவே எடுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE