லியோ – பட்டாசு கடைக்குள்ள வெடிக்கும் நெருப்பு மாதிரி. . .

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஆடியோ லான்ச் ட்ரைலர் லாஞ்ச் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் போனது. இதனால் அப்செட்டில் உள்ள ரசிகர்களுக்கு அவ்வப்போது லியோ படம் பற்றிய அப்டேட்டுகளை லோகேஷ் கனகராஜ் கொடுத்து வருகின்றார்.

அதேபோல மேயாத மான், மாஸ்டர், விக்ரமின் துணை கதாசிரியர் ரன்னகுமாரும் சேர்ந்துள்ளர். இவர்கள் இருவருமே படத்துக்கு முக்கிய பிரமோஷன் கன்டென்ட் ஆக தற்போது தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். படத்தில் நடிகர் விஜய்க்கு 130 கோடி ரூபாய் சம்பளம் என்று ஒரு பக்கம் தகவல்கள் கிளம்பி வர, அப்போது மெகா ஹிட் படமாக அது உருவெடுக்கும் என்றும் படத்துக்கு விஜயை நம்பி போட்ட பணம் அதன் கதை மீது உள்ள பலத்தை நிரூபிப்பதாகவும் பல்வேறு தரப்புகள் கூறுகின்றன.

படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 45 மில்லியன் வியூக்களை கடந்து கொண்டு செல்லும் நிலையில் லோகேஷ் கனகராஜ் பல youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதேபோல மேயாத மான் படத்தின் இயக்குனரும் மாஸ்டர், விக்ரம் படங்களின் துணைக் கதை ஆசிரியர் ரத்ன குமாரும் தனது பங்கு பிரமோஷன் செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “படத்தின் முதல் பாதி ஆட்டோ பாம் போல வெடிக்கும், ஒழுங்கா பற்றவைக்கவில்லை என நினைத்து அருகே போனால் மீண்டும் வெடிக்க தொடங்கும். ஆனால், இரண்டாம் பாதியில் பட்டாசு கடைக்குள்ளயே தீப்பற்ற வைத்தால் எப்படி தீயாக இருக்குமோ அப்படி தெறிக்கும்” என்று தனது முதல் விமர்சனத்தை வைத்துள்ளார் ரத்தினகுமார்.

நடிகர் விஜயும் அர்ஜுனும் பேசிக்கொள்ளும் காட்சிகள் அதிகம் பேசப்படும். அனிருத் இசை ரீ ரெக்கார்டிங்க இல்லாமல் கூட படம் பிளாக்பஸ்டர் தான் என்றும் கூறினார். ஏற்கனவே ஜெயில்ர் படம் அனிருத் இசை இல்லாவிட்டால் ஒன்றுமில்லை அனிருத் தான் வெற்றி பெறச் செய்தார் என்பது போல் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்த நிலையில் அதற்கு மாறாக இந்த விமர்சனம் வந்துள்ளது.

இவர்கள் இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்களே விஜயின் குட்டி ஸ்டோரி இன்னும் வரவில்லையே என்று ரசிகர்கள் ஒரு பக்கம் காத்திருக்கின்றனர். புரமோஷன் என்ற பெயரில் வரும் அப்டேட்டுக்களையும் தேடி தேடி படித்து எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர். நீங்கள் விஜய் ரசிகராகவோ, லியோவை எதிர்பார்ப்பவராகவோ இருந்தால் இந்த கட்டுரையும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE