Youtube ஐ திறந்தால் இர்பானின் ஒரு வீடியோவாவது ரெக்கமண்டேஷனில் வந்து நின்றுவிடும். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருவதுதான். பெரும்பாலானவர்களுக்கு இர்பான்ஸ் வியூ சேனல் மிகப் பிரபலம்.

யார் இந்த இர்பான்?

இர்பான் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த தகவல். கிட்டத்தட்ட 5.6 ஆண்டுகளுக்கு முன் யூடியூப் சேனல் தொடங்கி சென்னை எங்கெங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கும்? சுவையான உணவு கிடைக்கும்? என பதிவிட்டு வந்தார். youtube இல் நல்ல வருமானம் வர தொடங்கியதும் தனது பிபிஓ பணியை கைவிட்டார். இதை அடுத்து வெறித்தனமாக யூடியூபில் பெரும்பாலும் தினந்தோறும் வீடியோக்களை போட்டு வருகிறார். அவர் சமீபத்தில் 2000 ஆவது வீடியோ என பிரமிக்கத்தக்க வகையில் சாதனை படைத்துள்ளார்.

திருமணம்

சமீபத்தில் தான் யூடியூபர் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அடுத்து ஆளுநரே அழைத்து தேநீர் விருந்து கொடுக்கும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் உயர்ந்தது. ஏற்கனவே நடிகர் கமலஹாசனால் தூணிலும் இர்ஃபான் துரும்பிலும் இர்ஃபான் என புகழப்பட்டிருந்தார். ஒரு விருது வழங்கும் விழாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தந்தை

தனது 2000 ஆவது வீடியோவில் தனது ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் இர்பான். அந்த வகையில் அவரது தந்தை பற்றிய கேள்வியும் வந்தது. அதில் தனது youtube தொழில் பிடிக்காததால் அவரது தந்தை தன்னை வெறுப்பதாகவும் அதனால் தாய்க்கும் சந்தைக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக தாயும் தந்தையும் பிரிந்ததால்தான் தாயுடன் இருப்பதாகவும், தந்தை தனியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்பெல்லாம் அவரை அதிகம் தொடர்பு கொள்ளாமல் பேசாமல் இருந்த நிலையில் தற்போது தொடர்பு கொண்டு பேசத் தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

திருமணத்துக்கு வந்தாரா தந்தை?

தனது திருமணத்திற்கு கூட தந்தை வந்து சென்றதாகவும் ஆசி வழங்கியதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனால் தான் தனது தந்தையை இவ்வளவு நாட்களாக வீடியோவில் காட்ட வில்லை என்றும் தற்போது காட்டினால் அல்லது அவரைப் பற்றி பேசினால் கூட ஏதேனும் சங்கடப்படுவாரோ என்ற நிலையில் தான் அவரைப் பற்றி பேசாமல் தவிர்த்தாகவும் சொல்லி உள்ளார். மற்றபடி தனது தந்தை தான் தன்னை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, இவ்வளவு உயரம் கொண்டு வந்து விட்டவர் என்ற பெருமை மகுடத்தையும் தந்தைக்கு சூட்டினார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE