இந்தியாவிலேயே சின்ன CA இவங்கதான். அதும் ஆல் இந்தியா ரேங்க் நம்பர் 1.
சிஏ படிப்பு என்றால் மிகவும் கடினமானது. ஒருமுறை அரியர் வைத்து விட்டால் ஆரம்பத்தில் இருந்து அனைத்து பேப்பரையும் திரும்பத் திரும்ப எழுத வேண்டும் என்று கேள்விப்பட்டிருப்போம்.
மிகவும் அதி புத்திசாலிகள் படிப்பில் படி சுட்டிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கக்கூடிய சி ஏ படிப்பை ஆர்வத்தோடு தேர்ந்தெடுத்தவர் தான் நந்தினி அகர்வால்.
சிறுவயதில் இருந்தே படிப்பில் படு சுட்டியாக இருந்த நந்தினி அகர்வால், நன்கு படித்ததால் 2 வகுப்புகளில் படிக்காமலேயே அடுத்த கட்டத்திற்கு டபுள் ப்ரோமோஷன் 2 முறை பெற்றார்.
இதன் விளைவாக 13 வயதிலேயே பத்தாம் வகுப்பு முடித்தார் நந்தினி. 15 வயதில் 12 ஆம் வகுப்பு முடித்து மிக இளம் வயதில் சிஏ படிப்பில் சேர்ந்தார். 19 வயதில் CA படிப்பில் ஆல் இந்தியா ரேங்கில் நம்பர் 1 ராங்க் பெற்று தேர்ச்சி பெற்று அசத்தினார் நந்தினி.
ஆனால், இவருக்கும் சவால்கள் இருந்தது. 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் 16வது வயதில் அவர் இன்டெர்ன்ஷிப் செல்லும்போது எந்த நிறுவனமும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இருப்பினும் விடாது போராடி அவர் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
தற்போது நாட்டிலேயே மிக இளம் வயதில் சிஏ படித்து முடித்த பெண் என்ற பெருமையை நந்தினி அகர்வால் பெற்றுள்ளார். இந்த சாதனை கின்னஸ் ரெக்கார்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.