உலகத்துலயே பெஸ்ட் சீஸ் ஸ்வீட் பட்டத்தை வென்றது ரஸ்மலாய். . .
உலகத்துல எத்தனையோ ஸ்வீட்ஸ் இருக்கு. ஆனா நாம ஏன் இந்த ரஸ்மலாய இவ்ளோ லவ் பண்றோன்னு தெர்ல. ஜி.வி. கிட்ட கேட்டாலும் சரி, இவ்ளோ ஏன் நேத்து செத்துப் போன ஆவிகிட்ட கேட்டாகூட , “ஒனக்குப் புடிக்குமா? எனக்கும் புடிக்கும்”னு வருத்தப்படாத வாலிபர் சங்க ஸ்டைல்ல சொல்லிட்டு ஏங்கிப் போய்டும்.
சரி அதை விடுங்க, இப்போ எதுக்கு ரஸ்மலாய் புராணம்?ன்னு கேக்குறீங்களா? உலகத்துலயே “த பெஸ்ட் சீஸ் ஸ்வீட்ஸ்”-ல நம்ம நாட்டு ரஸ்மலாய்தான் 2-வது இடத்தைப் பிடிச்சுருக்கு.
டேஸ்ட் அட்லஸ் அப்டிங்குற உலகத்துல உள்ள சுவையான உணவுகளத் தேடித் தேடிப் பட்டியலிடும் நிறுவனம் தன்னோட புத்தகத்துல சீஸ் ஸ்வீட்ஸ் டாப் 25 பட்டியலிட்டிருக்கு. அதுல போலந்த் நாட்டுல இருக்கு ஸெர்னிக் அப்டிங்குற சீஸ் ஸ்வீட்தான் முதல் இடத்தைப் பிடிச்சுருக்கு.
இது 5 ஸ்டார் ரேட்டிங்ல 4.5 ஸ்டார் வாங்கியிருக்கு. இது, முட்டை, சர்க்கரை, தயிரிலேயே செஞ்ச ட்வாரோக் என்ற சூப்பரான சீஸ் உள்ளிட்ட பொருட்கள வெச்சு செய்யுறாங்க.
வியன்னா போர்ல துருக்கிக்கு எதிரா வெற்றி பெற்ற மூன்றாம் ஜான் சோபீஸ்கி எனும் மன்னன்தான் பாரம்பரியமான இந்த இனிப்ப மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
அப்போதிருந்து இந்த செர்னிக் சீஸ் ஸ்வீட், இப்ப பல நூற்றாண்டுகளுக்கு அப்புறமும் போலந்து மக்களால சுவைக்கப்படுவது வழக்கமாகியிருக்கு.
பட்டியல்ல இரண்டாவதா இடம் பிடிச்சுருக்கறதுதான் நம்மளோட “ரஸ்மலாய்”. அது ஒரு ஸ்வீட் இல்லங்க எமோஷன்.
ஜில்லுன்னு ரஸ்மலாய எடுத்து, வாயில வெச்சு கடிச்சதுமே, அதுல இருக்குற ஜுஸியான மில்க்கும், பல்லுல, படுதா படலையான்னு தெரியாம நொகு நொகுன்னு இருக்குற அந்த டெக்ஸ்ட்சரும், திடீர்னு வாயில தட்டுப்படுற நறுக்கிப் போட்ட பிஸ்தாவும், குங்குமப்பூவோட அந்த கமகம வாசனையும் யோசிச்சுப் பாத்தா, இதுக்கு ஏன்டா நம்பர் ஒன் குடுக்கலன்னு கேக்கத் தோணும்.
சரி, 2-வது இடமாச்சும் கொடுத்தாங்களேன்னு மனசத் தேத்திக்க வேண்டியதுதான். இந்த ரஸ்மலாய் நம்மூரு ஸ்வீட் இல்ல. நம்ம நாட்டில இருக்குற மேற்குவங்க மாநிலத்தோட ஆத்தன்டிக் ஸ்வீட்.
சீஸ் அப்டிங்குற பாலாடை வச்சு செய்யுறதால இந்தப் பட்டியல்ல இடம்பிடிச்சுருக்குற இந்த ஸ்வீட்ட, குறிப்பா ஹோலி, தீபாவளிப் பண்டிகைகள்ல தான் பெரும்பாலானவங்க வீட்ல செய்யுவாங்க.
இது செய்யுறது ஈஸின்னா, சாப்புட்றது அதவிட ஈஸி. உங்களுக்கு ரஸ்மலாய் பிடிக்கும்னா கமென்ட் பண்ணுங்க. உங்க சர்கிள்ல டயட்ல இருக்குறவங்களுக்குலாம் இதை ஸேர் பண்ணுங்க.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.