உலகம் முடங்கும் – பாபா வாங்கா கணிப்பு
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா கணித்த 85% சம்பவங்கள் நடந்துவிட்டன.
யார் இந்த பாபா வாங்கா?
1911-ல் பல்கேரியாவில் பிறந்தவர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. 81 ஆண்டு வாழ்ந்த இவர் “பாபா வாங்கா“ என அழைக்கப்பட்டு பிரபலமடைந்தவர். தனது 11-வது வயதில் ஒரு பெரிய புயலில் மர்மமான முறையில் பார்வையிழந்தவர். ஆனால், அப்போது எதிர்காலத்தைக் கண்முன் காணக்கூடிய சக்தியைப் பெற்றார். நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே கூறி எச்சரித்தவர் பாபா வாங்கா.
என்னென்ன கணிப்புக்கள் பலித்தன?
பாபா வாங்கா கூறியவற்றில் பெரும்பாலும் 85% சம்பவங்கள் நடந்துவிட்டன. இளவரசி டயானா மரணம், சோவியத் கலைப்பு, இரட்டை கோபுரத் தாக்குதல், தாய்லாந்து சுனாமி, பிரிட்டன் பிரிதல், கருப்பினத்தவர் அமெரிக்க அதிபராதல் (ஒபாமா) என துல்லியமாக கணித்த ஆண்டுகளில் அவைகள் நடந்தேறிவிட்டன. இப்பட்டியலில் 2023-க்கான இவரது கணிப்பும் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
2023-ல் பாபா வாங்கா கணித்தது என்னென்ன?
சூரியப் புயல் உருவாகும் என பாபா வாங்கா கணித்தது ஏற்கெனவே துவங்கிவிட்டது. அவ்வாறு சூரியனில் இருந்து பிளவுபடும் சூரியக் புயலின் தாக்கத்தால், உலகளவில் தொழில்நுட்ப சாதனங்கள் செயலிழக்கலாம். சோலார் மேக்ஸ்மம் பாதிப்பால் போக்குவரத்து சிக்னல்கள் செயலிழக்கும்.
தொலைத் தொடர்பு சாதனங்கள் செயல்படாது. ஏடிஎம் செயல்படாமல் போகலாம். உலகளவில் மின் தடை ஏற்படலாம். இவற்றின் விளைவாக சமூக குழப்பங்கள், நிதி நெருக்கடி ஏற்படக் கூடும். இப்பிரச்சனை சில ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
பெங்களூருவில் ஷாக்
ஏற்கெனவே கதிர்வீச்சு காந்த அலை காரணமாக பெங்களூருவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொட்டாலோ, கைப்பிடிகள், கதவு தாழ்ப்பாள்களைத் தொட்டாலோ லேசான ஷாக் அடிப்பதாக உணர்ந்து வருகின்றனர்.
2023-ல் வேறு என்னென்ன நடக்கலாம்?
பூமியின் சுற்றுப்பாதை மாறலாம். இதனால் புவி ஈர்ப்பு விசை பாதிக்கப்பட்டு வேறு சில பிரச்னைகளுக்கு வழி வகுக்கக் கூடும் என பாபா வாங்கா கணித்துள்ளார். இந்த ஆண்டு முக்கிய நாடு ஒன்று பயோ வெப்பன் என்ற உயிரி ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்றும் இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார். அதுமட்டும் இன்றி அணுமின் நிலைய வெடிப்பு காரணமாக ஆசியாவில் உள்ள நாடுகள் பாதிக்கக் கூடும் என்பது பாபா வாங்காவின் கணிப்புக்களில் ஒன்றாகும்.
வேற்று கிரக வாசி ஊடுருவல்?
உலகில் அந்நியர் வருகையால் பல லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என பாபா வாங்கா கூறியுள்ளது வேற்று கிரக வாசிகளாக இருக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது. 2023-ல் குழந்தைகள் ஆய்வகங்களில் பிறக்கும் என்றும், அதன் தோற்றம் மற்றும் குணாதிசயங்களை மாற்றிட முடியும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.