Women’s Day-க்கு என்ன கிஃப்ட் தரலாம்?
உணவு விருந்து
மகளிர் தினத்தன்று மட்டுமாவது அவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆண்களே விருந்து சமைத்து அவர்களுக்கு வழங்கலாம் அந்த ஒரு நாளை என்ணியே அடுத்த ஓராண்டும் முழுவதும் தங்களுக்கு எந்தவித குறையும் இல்லாமல் மகிழ்ச்சியோடு உணவு சமைத்து வழங்குவர். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு பிடித்த வகையிலான உணவுகளை சமைத்துக் கொடுக்கும் போது அவர்கள் அதை மிகவும் அன்பு நிறைந்த பரிசாகவே கருதுவர்.
கிப்ட் ஹம்பர்ஸ்
கிப்ட் ஹம்பர்ஸ் கொடுப்பது பல பெண்களுக்கும் பிடித்தமானது தான் அவர்களுக்கு பிடித்த உணவு பண்டங்கள், சாக்லேட்டுகள், புத்தகங்கள், பத்திரிகைகள், காபி, அழகு, சாதன பொருட்கள் ஆகியவற்றை கிப்ட் ஹம்பர்களாக வழங்கலாம்
மருத்துவக் காப்பீடு
வயதானவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை பரிசளிக்கலாம். மருத்துவ காப்பீடு என்பது எந்த ஒரு நபருக்கும் உடல் ஆரோக்கியத்தின் மீது ஒரு தைரியம் தரக்கூடிய ஒன்றாகும். அனேக நேரங்களில் போதிய பணம் கையில் இல்லாமல் போகும் சூழலில் தனக்கு ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் தன்னால் பிறருக்கு சிரமம் ஏற்படுமே என்பதே பலரது வருத்தமாக இருக்கும். அதனால் சில அபாய அறிகுறைகளை அவர்கள் வெளிப்படுத்தாமலும் போகலாம். அந்த மனக் குறையை போக்கும் விதமாக மருத்துவ காப்பீட்டை பரிசளிக்கலாம்.
ஸ்பா தினம்
நிறுவனங்கள்தனது ஊழியர்களுக்கு உடல் அசவுகரியத்தையும் சோர்வையும் போக்கும் விதமாக ஒரு நாள் ஸ்பா அல்லது மசாஜ் தினத்தை பரிசாக வழங்குகின்றன. பெண்கள் செய்யும் அனைத்து கடின உழைப்புக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இது அவர்களது உடல் வலிக்கும் மன ஆரோக்யத்துக்கும் தேவையான ஒரு சிறந்த பரிசாகும்.
செடி
பெண்கள் செடி வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவர். எனவே மகளிர் தினத்தன்று அத்தகைய ஆர்வமுள்ள பெண்களுக்கு அவர்களுடைய இடத்தை பிரகாசமாக்கும் வகையிலும், நறுமணம் அளிக்கும் வகையிலும் அழகிய மலர் அல்லது கனிகளை கொண்டு மரக் கன்றுகளை வழங்கலாம். இதனால் பல ஆரோக்கியமான நன்மைகள் விளையும் என்பதுடன் அந்த மரம் இருகும் காலம் வரை தங்கள் பரிசு பேசப்படும் ஒரு அர்த்தமுள்ள சிந்தனை மிக்க பரிசாகவும் இது இருக்கும்.
சுற்றுலா
அன்றாட வாழ்வில் இருந்து ஓய்வு கொடுக்க மிக அருகாமையிலோ, அல்லது வெகு தொலைவிலோ அவர்களது நீண்ட நாட்கள் நினைத்திருந்த இடத்துக்கோ ஒரு சுற்றுலாவாக அழைத்துச் செல்லலாம். இத்தகைய சுற்றுலா அவர்களது மனதுக்கு இதம் தரும் வகையில் அமையும். சில சமயம் அவர்கள் தங்களது தாய் வீட்டுக்குக் கூட செல்ல விரும்பலாம்.
வேலை நேரத்தைக் குறைக்கும் பொருள்
வீட்டுக்கு தேவையான பொருளாக இருந்தால் கூட மிக நீண்ட காலமாக அவர்களது பணியை குறைக்கும் சாதனங்களாக அது இருந்தால் அதை வாங்கி கொடுப்பது அன்றைய தினம் மட்டுமின்றி அதன் ஆயுள் முழுவதும் பெண்களுக்கு பயன் அளிக்கும். உதாரணமாக அவர்கள் காய்கறி வெட்டும் நேரத்தை குறைக்க டைசர்களையும் சாப்பர்களையும் அல்லது அந்த பயன்பாட்டுடன் கூடிய மிக்சிகளையும் வாங்கி கொடுக்கலாம்.
ஆயுள் காப்பீடு
பெரும்பாலான பெண்கள் அசம்பாவிதங்கள் நேரும்போது தலையில் இடி விழுந்ததுபோல் உடைந்து போய் விடுவர். எனவே மகளிர் தினத்தில் அவர்களுக்கு தைரியமூட்டக்கூடிய தங்களுடைய ஆயுள் காப்பீட்டை வழங்கலாம்.
குடும்பத்துடன் ஒரு நாள்
அனைத்திலும் மேலானதாக கருதப்படும் இந்த பரிசு. மகளிர் தினத்தன்றாவது குடும்பத்தோடு இருந்து அவர்களுக்கு என நேரத்தை செலவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரிய பரிசாகும். ஒன்றாக அமர்ந்து பேசாமல் விட்டுப் போன பல அரட்டைகளை தொடரவும் ஒருவருக்கொருவர் மேலும் புரிந்து கொள்ளவும் இந்த பரிசு மிகவும் சிறந்ததாக அமையும்.