பெண்களுக்கு மாதம் ரூ.8,500! அதிரடியாக அறிவித்த ராகுல் காந்தி!

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து அதை அமல்படுத்தியும் வருகிறார்.

இதை பார்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பல மாநிலங்களிலும் தங்களது தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற ஒரு திட்டத்தை அறிவித்து வருகின்றன.

ஏற்கனவே பெண்களுக்கு இலவச பஸ் சேவை என தமிழகத்தில் பல முன்னோடி திட்டங்கள் உள்ளன.

அதேபோல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி மாதம் தோறும் பெண்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ. 8,500 வழங்கப்படும் என்றும் ஜூலை மாதம் முதலே அது அமல்படுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மட்டுமன்றி அடுத்தடுத்த மாதங்களிலும் இந்த பணம் பெண்களின் வங்கி கணக்கில் வரும் என்றும் அதற்கு காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டியது மக்கள் பணி என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களை கவரும் விதமாக அறிவிப்பு விடுத்த ராகுல் காந்தி தனது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஏற்கனவே அவர் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறியிருந்த நிலையில் அதை தனித்தனியாக பிரித்து மாதந்தோறும் 8,500 ரூபாயாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படி ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாயுடன் சேர்த்து இந்த 8,500 ஐயும் சேர்த்தால் பெண்களின் வங்கி கணக்கில் மாதம் தோறும் 9,500 ரூபாய் பணம் வாய்ப்பு உள்ளது.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தது போல், யார் யாருக்கு இந்த பணம் கிடைக்கும் ? என வரைமுறைப்படுத்தி பின் அறிவிப்பு ஏதும் வெளியிடுவாரா ராகுல் காந்தி என்ற பேச்சும் அடிபடுகிறது.

தற்போதைக்கு உழைக்கும் மகளிருக்கு இந்த பணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இருந்தாலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசியல் கட்சிகள் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிடுவதை கேட்கும் போது பெண்கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

அதேசமயம் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வரும் என்று ஒரு அறிவிப்பு போல் இதுவும் கானல் நீராகி விடக்கூடாது என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Facebook
Instagram
YOUTUBE