3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் – அதிர்ச்சி தகவல்
2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 13.13 லட்சத்துக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2013 இயற்றப்பட்டது.
ஸ்மார்ட் காவல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்கு உதவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய எட்டு நகரங்களில் பாதுகாப்பான நகரத் திட்டங்களுக்கு தேர்வாகியுள்ளன.
2019ஆம் ஆண்டில் 82,084 சிறுமிகள் மற்றும் 3,42,168 பெண்களும், 2020இல் 79,233 சிறுமிகள் மற்றும் 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளதாக அஜய் குமார் மிஸ்ரா கூறியிருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் மாயமாகி உள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் 1,56,905 பெண்களும், 36,666 சிறுமிகளும் மாயமாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். சத்தீஸ்கரில் இருந்து 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்