90ஸ் கிட்ஸ் களுக்கு ஃபேவரிட் ஹீரோயினாக இருந்த திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் லியோ படங்களில் நடித்து வருவதன் மூலம் 2k கிட்ஸ்களின் மனதிலும் இடம் பிடிக்க தொடங்கிவிட்டார். 20 வயதில் எப்படி இருந்தாரோ அப்படியே தான் 40 வயதிலும் அவர் தனது உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரித்து வருகிறார்.

இருந்த போதும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே வருண் என்ற தொழிலதிபருடன் அவருக்கு நடந்த நிச்சயதார்த்தம் பல்வேறு மனக்கசப்புகளால் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து தனது தோழிகள் விவாகரத்தை நோக்கி செல்வதை கண்டு தனக்கு திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது.

என்றும் நிலையான ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பிக்கை வந்தால் அப்போது தான் திருமணம் செய்து கொள்வதாகவும் திரிஷா கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை திரிஷா அளித்த பேட்டியில் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி உள்ளார்

விஜயுடன் லியோ படத்தில் நடித்தது போல் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளதார். இந்த நிலையில் தனக்கான நபரை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என த்ரிஷா கூறினார். அவர் பேசும்போது “அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன் அவர் எனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்பார். அப்படி கேட்பவரை யாருக்குத்தான் பிடிக்காது. நானும் அவரும் நிறைய பேசியிருக்கிறோம். அதில் சினிமா சார்ந்த விஷயங்கள் கூட இல்லை. அவர் பலதரப்பட்ட விஷயங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நல்ல கணவரும் அப்பாவுமாக இருக்கிறார். அவரை போன்ற ஒரு நபரை எந்த பெண்ணும் கணவனாக பெற வேண்டும் என்று விரும்புவாள்.” என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE