பொண்ணுங்க அப்டினாலே தியாகம் தான். காலைல சூடா போட்ட காப்பியக் கூட குடிக்காம கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு சுத்துவாங்க. காலைக்கடன் முடிக்க கூட நேரமில்லாத கான்ஸ்டிபேசன்ல கஷ்டப்படுவாங்க. அவங்களுக்குன்னு எதுவும் செஞ்சுக்காம குடும்பத்துல எல்லாரும் சாப்டாங்களா? குளிச்சதும் போட அயர்ன் பண்ண டிரஸ் இருக்கா? குழந்தைகள் வீட்டுக்குத் திரும்ப வரும்போது அவங்களோட லஞ்ச் பாக்ஸ் காலியா இருக்கா? அப்டின்னு யோசிச்சுட்டே பொழுது போயிடும்

அதுவே வேலை செய்யுற பொண்ணுங்களா இருந்தா,சொல்லவே வேணாம். இந்த டார்கெட் இருக்கே, அந்த டாஸ்க் இன்னும் முடிக்கலையேனு யோசிப்பாங்க. சொந்த தொழில் இருந்தா அதுக்கும் மேல. தங்கள கவனிச்சுக்க நேரமே இல்லாம இருப்பாங்க. அப்படியிருக்கும்போது, செல்ஃப் லவ்-க்கு வாய்பேயில்ல.

செல்ஃப் லவ் னா என்ன?

அனைவரையும் அன்பா பாத்துக்குற நாம, நம்மலோட மனசையும், உடலையும் அன்பா பாத்துக்குறோமா-ன்னு கேட்டா நிறையே பெண்கள் இல்லன்னு தான் சொல்லுவாங்க. அவங்க முதல்ல தங்களத் தாங்களே நேசிச்சாதான் அடுத்தவங்களும் நேசிப்பாங்க. அதனாலதான் செல்ஃப் லவ் முக்கியம். பின்வரும் டிப்ஸ்-அ

அடுத்தவங்க ஒப்பினியனுக்கு முக்கியத்துவம்

நாம எப்டி நடந்துக்கிட்டாலும், டிரஸ் பண்ணாலும், சாப்பிட்டாலும் அடுத்தவங்களுக்கு நம்மளப் பத்தின ஒரு ஒப்பினியன் இருந்துட்டே தான் இருக்கும். அதனால் இத செஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க? இவங்க என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் யோசிக்கவே கூடாது. உங்க மனசாட்சிக்கு சரியா வரும் அப்டிங்குற காரியங்கள துணிச்சலா எடுத்து செய்யுங்க.

ஆரோக்யம்

முதல்ல உங்களோட ஆரோக்யத்துல கவனம் செலுத்துங்க. சரியான நேரத்துல சாப்டுங்க. ஆரோக்யமான உணவ எடுத்துக்கோங்க. பழங்களையும், காய்கறிகளையும் உணவுல சேர்த்துக்கோங்க.

மன நல ஆரோக்யம்

தினமும் உங்க மனசுக்குப் புடிச்ச மாதிரியான விஷயங்கள 10 நிமிஷமாவது செய்யுங்க. சமைக்கும் போது பாடுறது ஆகட்டும், தையல், எம்ப்ராய்டரி, கதை படிக்குறது, கவிதை எழுதுறதுன்னு ஏதாவது ஒரு புடிச்ச விஷயத்த பண்ணுங்க.

ஒப்பீடு

எல்லாருமே அழகுதான், அத விட்டுட்டு உங்களோட அழக மத்தவங்களோட ஒப்பிடாதீங்க. அதை விடுத்து உங்களோட வாழ்க்கைப் பயணத்துல கவனம் செலுத்துங்க.

டாக்சிக் உறவு

டாக்சிக் உறவுகள் இருந்தால் உடனே வெளியேறிவிடுங்கள்.. உங்களைச் சுற்றி உங்களுக்கு அன்பானவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்க. உங்கள பாசிடிவ் ஆ வெச்சுருக்கறவங்க, உங்கள என்கரேஜ் பண்ணுறவங்ககூட அதிகம் பேசுங்க. அவர்களுடன் நேரம் செலவிடுங்க. குட்டி குட்டி ட்ரிப்பெல்லா வாய்ப்பு கிடைக்கும்போதே போய்ட்டு வாங்க. உங்க மனசோட ஆரோக்யம்தான் உங்களோட ஆரோக்யம். அதுதான் உங்க குடும்ப உறுப்பினர்களோட ஆரோக்யமும் கூட.

மன்னிப்பு

உங்களோட முந்தைய கால தவறுகள நினைச்சுப் பாத்து, உங்கள நீங்களே மன்னிக்க பழகுங்க. துக்கத்திலோ, துயத்திலோ உழன்றுக்குட்டே இருக்குறது உங்க மனசுக்கும், உடலுக்கும் நல்லது இல்ல.

முழுமையடைதல்

வலியோ, இன்பமோ முழுமையா அனுபவிச்சு முடிங்க. ஒத்தி போட வேண்டாம். உணர்வுகள கட்டுப்படுத்தவும் வேண்டாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE