“லவ் யூ ஆல்!, மிஸ் யூ ஆல்!” – மீராவுக்கு என்ன மன அழுத்தம்?
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் ஆண்டனி ஃபாத்திமா தம்பதிக்கு மீரா, லாரா என இரு மகள்கள்.
மீரா சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் டூ படித்து படித்து வந்தார் . கடந்த 1 வருடமாக மனநல பிரச்சனைக்கு அவர் மருந்து எடுத்துக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று அவர் தனது தோழிகளுடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கு அடுத்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.
அதிகாலை 3 மணிக்கு மீரா, தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். பின் தனது உதவியாளரை அழைத்து காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனையின் முதல் கட்ட அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் மீரா தற்கொலை செய்து கொண்டதும் உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே மீரா மன அழுத்தத்துக்கான மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டு இருந்த ஆவணங்கள் பற்றியும் விஜய் ஆண்டனி விளக்கி கூறி இருந்தார்.
மீரா இறந்ததும் சந்தானம் உள்ளிட்ட பிரபலங்கள் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வர தொடங்கினர். நிழல்கள் ரவி குஷ்பூ நடிகர் விஜயின் தாய் ஷோபா உள்ளிட்டோர் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விஜய் ஆண்டனி-ஃபாத்திமா தம்பதியின் மகள் மீரா உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், எவ்வாறு ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை என்றும் மீராவின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் நடிகர் சரத்குமார் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி கேட்டு மனம் உடைந்து போனதாகவும், இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்துக்கு கடவுள் கொடுக்கட்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்
எதனால் மன அழுத்தம்?
மீரா நன்கு படிக்கக் கூடியவர். முதல் மதிப்பெண் வாங்காவிட்டாலும் நடுத்தரமான மாணவியாக பள்ளியில் திகழ்ந்ததாக ஆசிரியை ஒருவர் தெரிவித்தார்.
பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ள கூடியவர் மீரா. கடந்த ஜனவரியில் அவர் கலைநிகழ்ச்சிகளுக்கான தலைவராக பதவியேற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிளஸ் டூ படிப்பதால் அதிக பிரஷரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தூக்கம் இன்றி தவித்ததாகவும் தூக்கம் வராமல் தான் இவருக்கு மன அழுத்தம் அதிகரித்ததாகவும் இவருக்கு தெரபி அளித்த மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது
தனக்கு இருக்கும் மன அழுத்தம், தூக்கம் வராத பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து நண்பர்களிடமும் மனம் திறந்து பேசி உள்ளார். இருந்த போதும் அவரது மன அழுத்தத்திற்கு என்ன காரணம்? என்று அவரது நெருக்கமானவர்களுக்கு கூட தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது.
மீரா தனது அறையில் 11 மணி வரை லேப்டாப் பார்த்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின் அதிகாலை 3 மணியளவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீரா தனது பள்ளி பாட புத்தகத்தில் தனது “ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். என்றும் லவ் யூ ஆல் தேங்க்யூ ஆல், மிஸ் யூ ஆல்” என்றும் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது மீராவின் கைபேசி மற்றும் லேப்டாப்பை சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.