தமிழைப் பாடலாம். ஆங்கிலத்தில் இருக்கும் போமைக் கூட பாடலாகப் பாடலாம். ஆனால், அறிவியலை, அதிலும் குறிப்பாக வேதியியலைப் பாட முடியுமா? பாடலாக பாடியே மாணவர்களுக்கு புரிய வைக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்கிறார் தென்காசி மாவட்டம் வீரகேலம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மாலதி.

பாடல் மட்டுமல்ல வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் போன்ற கலைகள் முதல் ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வரை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார் மாலதி.

இவரது பணியை பாராட்டி இவருக்கு 2020 2021 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு. மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் முதலில் பணியாற்றது 2008 டிசம்பர் 31-ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான். பணி காலத்தை தொடங்கியதற்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாறுதல் காரணமாக சென்றார்.

அங்கிருந்து 2012ல நான் வீரகேரளம் தென்காசி மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பணியாற்றினார். “அரசு மேல்நிலைப்பள்ளி நான் அறிவியல் பாடம் எடுக்கிறதுனால என்னுடைய அறிவியல் பாடத்தை மாணவர்கள் விரும்பி படிக்கனும்னு ஆசைப்படுவேன். கலாச்சாரத்தையும் அறிவியலோடு புகுத்தணும் அப்படின்னு நான் நினைச்சேன். அதனால வில்லுப்பாட்டு. சிலம்பம் இதுதான் நாம் அறிவியலோடு சேர்ந்து சொல்லித்தரதுக்கு ஆரம்பிச்சேன். இந்த அறிவியலைக்கொண்டு கிட்டத்தட்ட எனக்கு ஒரு 4 மாணவர்கள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்“

“கொரோனா தொற்று காலத்துல யூடியூப்ல அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இலவசமா பாடம் எடுத்தேன். நான் கற்றுத் தர்ற விதம் பாத்து ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோட கத்துக்கிட்டாங்க. அப்போதான் ஆசிரிய, ஆசிரியைகள், எங்களுக்கும் எளிமையா சொல்லித் தர்றது எப்டின்னு கத்துக் கொடுங்கனு சொன்னாங்க. 100 முதல் 150 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்ததாலதான் அரசு எனக்கு இந்த விருது கொடுத்துருக்காங்க.” என்றார் மாலதி டீச்சர்.

மாணவர்களுக்கு இணையம் வழியா கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். எப்படி வீடியோ எடிட் பண்ணலாம்? என்றும் சொல்லிக் கொடுத்து இணையம் வழியே கல்வியை கொடுத்தார். இந்த ஆசிரியர் பணி எனக்கு ஒரு மகத்தான பணியாக உள்ளதால் அதனை தான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

மாலதி டீச்சருக்கு நமது காரிகை சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE