பெண் குழந்தைகளுக்கு படிப்ப சொல்லித் தர்றோம். ஆனா பாதுகாப்ப ??
“அவன புடிச்ச ஜெயில்ல போடுங்க சார்” “அவன புடிச்சு தூக்குல போடுங்க சார்” “நடு ரோட்ல நிக்க வச்சு துண்டு துண்டா வெட்டணும்” “சுட்டுத்தள்ளனும்” என காலம் காலமாக பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
பொம்மைகள் வைத்து விளையாடும் பிஞ்சு குழந்தைகளை கஞ்சா போதை பொறுக்கிகள் சீரழித்த கொடூரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரியில் உள்ள சோலை நகர் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த சிறுமியை திடீரென காணவில்லை என அக்கம் பக்கத்தில் பெற்றோர் தேடிப் பார்த்து பதறிப் போய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குழந்தையை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாக போலீசாருக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன.
இந்த நிலையில் தான் கடந்த 5ம் தேதி அன்று சிறுமியின் சடலம் வேட்டி பெட்ஷீட் உள்ளிட்டவற்றால் போர்த்தி மூட்டையாக கட்டப்பட்டு சாக்கடை கால்வாய்க்குள் கிடந்தது.
புதுச்சேரி சபாநாயகர் கூட கண்கலங்கியபடி பேசி இருந்தார். புதுச்சேரியில் முழுவதும் சிறுமிக்கு ஆதரவாகவும் அந்த கயவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் கூறி போராட்டங்கள் வெடித்துள்ளன.
கஞ்சாவையும், போதையையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தாலும், இது அரசின் கையில்தான் உள்ளது.
சிறுமி விவகாரத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் தான் இந்த கொடூரத்தை செய்திருக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 59 வயதான நபரையும் 19 வயதான இளைஞர் உள்பட ஆறு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜஸ்டிஸ் ஃபார் ஆர்த்தி என்று ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. எப்படியும் இன்னும் சில நாட்கள் இதைப்பற்றி தான் மக்கள் பேசுவார்கள். ஆனால், சிறிது காலம் சென்றதும் அதை மறந்து விட்டு தங்களது பணியை பார்க்க தொடங்கி விடுவார்கள்.
எங்கோ யாருக்கோ தான் நடக்கிறது என்ற அலட்சியம் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தாலும் தற்போது பெண்களை பெண் குழந்தைகளையும் கடைக்கு அனுப்பக்கூட பயந்து கொண்டு தான் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
ஆண் பெண் என இரு பாலின குழந்தைகளும் இருக்கும் வீட்டில் பள்ளியில் நடக்கும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றால், ஆண் மகனுக்கு கராத்தேவும் பெண் பிள்ளைக்கு பரதநாட்டியமும் தான் கற்றுத் தருகின்றனர்.
பெண் குழந்தைக்கு எதற்கு தற்காப்பு கலை? கராத்தே? தேக்வாண்டோ? என கேட்கும் நிலை இன்றும் அதுவும் குறிப்பாக இத்தனை குழந்தைகள் படுகொலை நடப்பது தெரிந்தும் பெற்றோர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
குழந்தைகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பையும் தற்காப்பையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து பூட்டி வைத்து வெளி உலகத்தை காண்பிக்காமல் இருப்பதை விட வெளியில் எப்படி பாதுகாப்பாக சென்று வர வேண்டும் என்ற வலியுறுத்தல்களை கூறுவதில்லை.
எதுவுமே ஆயுதம் இல்லாத நேரத்தில நகமும் பல்லும் கூட பயன்படுத்தி தப்பிக்கலாம் என சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.