சித்தா படத்தை ஏன் கொண்டாடுகிறார்கள்?

சித்தா என்ற பெயர் வைத்ததுமே ஏதோ சித்த மருத்துவம் பற்றிய படம் என்றுதான் பலரும் நினைத்திருப்போம். ஆனால் சிட்டாக நடத்திருக்கிறார் சித்தார்த்.

கதையும் கதைக்களமும் அதிவேகத்தில் பயணிக்காவிட்டாலும் நம்மை பரபரப்பாக்குகிறது.

படத்தின் கதை என்ன?

சித்தா என்றால் சித்தப்பா என்று அர்த்தம். சித்தப்பாவின் ஷார்ட் ஃபார்மே சித்தா என்று சுந்தரி அழைக்கிறார். சுந்தரி என்ற சிறுமிதான் சித்தார்த்தின் அண்ணன் மகளாக இந்த படத்தில் வருகிறார். பொதுவாக அண்ணன் மகளுக்கும் ஒரு சித்தப்பாவுக்கும் இருக்கும் உறவு பற்றிய படங்கள் தமிழ் திரையுலகில் பெரும் அளவு வந்ததில்லை. அதில் இந்த படம் ஒரு ஹைலைட்டாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. சற்றும் வன்முறையின்றி அழகாகவும் தெளிவாகவும் படம் நகர்கிறது.

பழனியில் அரசு வேலையில் இருக்கிறார் சித்தார்த். அண்ணன் இறந்து விட அண்ணி நிமிஷா மற்றும் குட்டி பாப்பா சுந்தரி உடன் வசித்து வருகிறார். நிமிஷா ஏற்கனவே மலையாள படத்தில் நடித்து புகழ்பெற்றவர். த கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் கதாநாயகியாக நீங்கள் அரைப் பார்த்திருக்கலாம்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக எளிமையாக அதேசமயம் அழுத்தம் திருத்தமாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சித்தா வான சித்தார்த் தனது மகள் போல அண்ணன் மகளை பாவிக்கிறார். அவருடைய நண்பனின் மகளான பொன்னியும் சுந்தரியும் தோழிகள்.

இருவரையுமே ஒன்று போல் பாவிக்கும் சித்தா அவர்கள் மீது அதிக அன்பு வைக்கிறார். இந்த நிலையில் தான் சுந்தரியின் தோழி பொன்னி பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார். சந்தேகம் சித்தாவின் மீது திரும்ப அவர் அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் கதை.

ஆனால் அதற்குள் சுந்தரி கடத்தப்படுகிறார். இதில் கோபம், தன்னால் எதுவும் செய்ய முடியாத இயலாமை, பின்பு வெகுண்டு எழும் குணம் என அனைத்தையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார் சித்தார்த். பாய்ஸ் படத்துக்கு பிறகு இருந்த படம் அவரது திரை பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.

நல்ல கதைகளை அருமையாக தேர்ந்தெடுத்து அளவாகவும் அழகாகவும் நடித்து இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக கொண்டு சேர்த்து இருக்கின்றனர். குட் டச், பேட் டச்சின் அவசியம் என்ன என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை இந்த படம் உணர்த்துகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE