இனி யாரு விளையாட வருவாங்க?-சாக்ஷி ஓய்வில் விஜேந்தர் ஆவேசம்.

மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தவர் சாக்ஷி. குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் உதவியாளர், சஞ்சய் சிங்கே மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக தேர்வானார்.

இது குறித்து பேசிய சாக்ஷி, ‛‛புதிய தலைவராக ஒரு பெண்தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் கூட பெண் இல்லை. பிரிஜ் பூஷனின் உதவியாளரைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை ஏற்க முடியாது”

இதை எடுத்து மல்லித்த போட்டிகளில் இருந்தே தான் விளக்குவதாக அழுதபடியே அறிவித்துவிட்டு சென்றுள்ளார் சாக்ஷி மாலிக்.

சாக்‌ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மல்யுத்த வீரர் விஜேந்தர் சிங், “ஒரு விளையாட்டு வீரராக சாக்‌ஷி வலியை புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் தங்கம் வென்றவர் அவர். அந்த வீராங்கனை வேண்டியது எல்லாம் நீதி மட்டுமே. ஆனால், அது அவருக்குக் கிடைக்கலை. இதனால், வேதனை அடைந்துதான் அவர் ஓய்வை அறிவித்தார். இதனால், உலக அளவில் இந்தியாவின் பிம்பம் உயருமா, குறையுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் ஏமாற்றமடைந்துள்ளது. இதற்குப் பின், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை விளையாட அனுப்புவார்களா? ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கே நீதி இல்லை என்றால் தங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அவர்கள் கவலை அடைய வாய்ப்புள்ளது.”

” பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் ஏன் இது நடந்தது என்று பதிலளிக்க வேண்டும். இது நீதி அமைப்பு, ஜனநாயக கட்டமைப்பின் மீதும் கேள்விகளை எழுப்பியுள்ளது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE