‘திருப்பதி லட்டு’. மக்களுக்கு மொட்டை போட்டது யார்?

0

“திருப்பதிக்கு போறீங்களா. மறக்காமல் லட்டு வாங்கிட்டு வாங்க.”

பெரும்பாலும் திருப்பதிக்கு போறவங்கள இப்படித்தான் சொல்லி வழி அனுப்பி வைப்பாங்க.

அப்படி திருநெல்வேலி அல்வா போல திருப்பதியில் லட்டு என்பது மிகவும் பிரபலமானது.

ஏன் பிரபலமானது?

டிமாண்ட் அண்ட் சப்ளை ஃபார்முலாவுக்கு ஏற்ப ஒரு ஆளுக்கு இவ்வளவு தான், இதற்கு மேல் சென்றால் இந்த விலை தான், அதிக அளவு கிடைக்காது என்று திருப்பதியில் லட்டுக்கு டிமாண்ட் ஏற்றி ஏற்றியே அதன் மதிப்பையும் கூட்டி விட்டனர்.

மாற்று மதத்தினரும் விரும்பும் லட்டு

வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள், கோவில் பிரசாதங்களை பெரும்பாலும் எடுத்துக் கொள்ளாதவர்களாக இருந்தாலும் பக்கத்து வீட்டுகாரர்கள் அல்லது அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் யாரேனும் திருப்பதியில் இருந்து வாங்கப்பட்ட பிரசாத லட்டுவை கொண்டு வந்து கொடுத்தால், அதன் ருசிக்காகவே வாங்கி சாப்பிட்டவர்களும் பலரும் உண்டு.

எப்படி இருக்கும்?

உருவத்தில் பெரிதாக இருக்கும். முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை ‘நானும் இருக்கிறேன்’ என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வந்து நின்று கவர்ந்து விடும். அதன் தோற்றமும் கமகமக்கும் நெய் மணமும் தித்திக்கும் இனிப்பும். . !. . அட. . ! அட. . !

இப்போது நினைத்தாலும் நாக்கில் ஊரும் சுவை கொண்டது.

ஆனால், திருப்பதி வெங்கடேச பெருமாளை சேவித்துவிட்டு லட்டு வாங்கி சாப்பிட்ட சைவ பிரியர்களும், சில அசைவு பிரியர்களுமே கூட இன்று அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.

இதற்குக் காரணம் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் புனிதமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டு இறைச்சி கொழுப்பு கலந்ததாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார் சந்திரபாபு நாயுடு.

என்ன சொன்னார் அவர்?

“கடவுளுக்கு வாங்கும் பிரசாதத்தில் இத்தகைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. சில நேரங்களில் இது மிகவும் வருத்தமளிக்கிறது. சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் லட்டுவின் தரத்தை உயர்த்துவோம். வெங்கடேஷ்வரரின் புனிதத்தைக் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது,” என்று ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார் சந்திரபாபு நாயுடு.

அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

இதை அடுத்து லட்டு பற்றி ஆய்வு செய்ததாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலும் பகீர் தகவல்கள் வெளியாகின.

அதில் என்ன கலக்கப்பட்டதோ?

புனிதமான திருப்பதி லட்டுவில் “மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி எனும் பீஃப் கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டது” என வெளியான ஆய்வறிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு பழி போடுகிறார்கள் என்று தான் உண்மையை ஏற்க மறுத்து வந்த பல திருப்பதி லட்டு பிரியர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதை இந்த அறிக்கை முறியடித்து விட்டது.

மறுப்பு

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராகப் பணியாற்றிய ஒய்.வி.சுப்பாரெட்டி, சந்திரபாபுவின் இந்தக் கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும், திருமலாவின் புனிதத்தையும் சேதப்படுத்தும் வகையில் பேசி சந்திரபாபு மிகப்பெரிய பாவத்தைச் செய்துவிட்டார் என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார். சந்திரபாபுவின் கருத்து மிகவும் மோசமானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் கந்தரபு முரளி, முதல்வரின் கருத்தை விமர்சனம் செய்தார்.

லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவது திருமலை தேவஸ்தான ஊழியர்களை அவமதிக்கும் செயல் என்று கூறினார்.

தேவஸ்தானத்தில் இருக்கும் ஆய்வகத்தில் அனைத்து விதமான உணவுப் பொருட்களும் முறையாக சோதிக்கப்பட்டே எந்தவிதமான பிரசாதமும் தயாரிக்கப்படுகிறது. பரிசோதனைகள் முடிவுற்ற பிறகே பயன்பாட்டிற்கும் வைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் குழுவால் சோதிக்கப்படும் உணவுப் பொருட்கள் முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே பிரசாதத்திற்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே லட்டு தயாரிப்புக்கு நெய் வினியோகித்து வந்த நந்தினி என்ற நிறுவன பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திருப்பதி தேவஸ்தானத்தால் தரம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட 4 கண்டெய்னர் நெய் என்ன ஆனது ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பதில் அளிக்க விடாமல் ‘ போதும், பேட்டியை முடித்துக் கொண்டு உடனே வெளியேறு!’ என்று செய்தியாளர்களுக்கு பின்னால் இருந்து ஒயிட் சுடிதார் போட்ட பெண் ஒருவர் சொன்னது மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

வெளியான ஆய்வறிக்கையின் உண்மை தன்மை பற்றி சிபிஐ ஆய்வு செய்தால்தான் உண்மை விபரம் தெரியவரும்.

உங்களுக்கும் திருப்பதி லட்டு பிடிக்குமா? கமெண்டில் சொல்லுங்க. . !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Instagram
YOUTUBE