ஆனந்த் அம்பானி கல்யாணத்துல பாட்றதுக்கு ரூ.74 கோடி வாங்கின ரிஹானா யார் தெரியுமா?

Pop singer Rihanna

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சான்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகளுக்காக உலகம் முழுவதுமிலிருந்து பிரபலங்கள் வந்தனர். இதில் குறிப்பிடத்தக்கவராக உள்ள ரிஹானாவுக்கு மட்டும் 8 முதல் 9 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார், ரூ. 66 கோடி முதல் ரூ.74 கோடி ரூபாய் கொடுத்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இவர் அவ்வளவு எளிதாக தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார். இருப்பினும் ஆனந்த் அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கேற்று 19 ஹிட் பாடல்களைப் பாடிக் கொடுத்து தனது குழந்தைகள் காத்திருக்கின்றனர் எனக் கூறி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார.

ரிஹானாவுக்கும்-இந்தியாவுக்கு மற்றொரு தொடர்பும் உள்ளது. ஏற்கெனவே இவர் 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி டிவிட்டரில் பேசி, உலகப் பிரபலங்களின் கவனத்தை திசை திருப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமுதல் ரிஹானா யார்? அவர் எந்த நாட்டவர்? அவர் பாடல்கள் என்ன? அவரின் மதம் என்ன? என பலரும் இணையத்தில் தேடியதை அடுத்து பல இந்தியர்களுக்கும் அவர் பரீட்சயமானார்.

ரிஹானாவின் பாடல்கள் மரண மாஸ் ஹிட்

2003-ம் ஆண்டில் தனது இசைப்பயணத்தை ஆல்பங்களை வெளியிட்டு தொடங்கியபோது ரிஹானாவுக்கு 15 வயது. 2007-ல் Good Girl Gone Bad என்ற ஆல்பம் மூலம் செம்ம ஹிட் கொடுத்தவர். 6 முறை ஆஸ்கர் வென்ற படைப்பாளி ரிஹானா. Bitch Better Have My Money, Work, Umbrella, Stay, All of the Lights, We Found Love, Diamonds, Where Have You Been, Rude Boy, Pour it Up உள்ளிட்ட ஆல்பங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

பாப் நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து பில்போர்டு ஹாட் 100 தரவரிசையில் 14 நம்பர் 1 ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார். இந்த தரவரிசையில் 31 டாப் 10 ஹிட்ஸ்களை கொடுத்து தனி முத்திரை பதித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE