ஆதவ் அர்ஜுனா: ஒரு முன்னோடி போராளியின் பாதை

0

ஆதவ் அர்ஜுனா யார்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கியமான தலைவராக, தன்னுடைய மக்கள் centered வழிமுறைகளால் தனி ஒரு அடையாளத்தைப் பெற்றவர். கட்சியில் அவரின் பங்களிப்பு, சமூக நீதியை முன்னேற்றவும், வலுவான அரசியல், சமூக மாற்றங்களை அடைவதற்கும் வழிவகுத்தது.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தர அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.

மக்களைக் கவர்ந்தது எப்படி?

ஆதவ் அர்ஜுனா, தனது அரசியல் உரைகளிலும் செயற்பாடுகளிலும் தன்னுடைய மக்கள் மைய சிந்தனையைக் கையாளுவது மக்களைக் கவர்ந்தது. உண்மையான சமூக மாற்றத்துக்காக போராடுவது மூலம் மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.

அவர் அரசியல் சேவையை சாதாரண இலக்கு அடைவதற்காக பயன்படுத்தவில்லை. நாட்டு மக்களுக்கான நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்காகவே களமிறங்கி பிரச்சார வியூகங்களை வகுத்து வருகிறார் என அவரது ஆதரவாளர் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

6 மாத பதவி இடை நீக்கம்

பிறப்பால் முதலமைச்சர் ஆகிவிட முடியாது என்று மன்னராட்சி என தமிழகத்தில் சுட்டிக்காட்டி பேசியதால் விசிக கூட்டணியோடு குழப்பம் ஏற்பட்டது. கட்சி கொள்கைகளில் தமக்கு ஒப்புக்கொள்ள முடியாத பாகங்களுக்காகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என தொல் திருமாவளவனே கூறியுள்ளார். மாறாக அவர் மீது எந்த ஒரு பெரிய குற்றச்சாட்டையும் அவர் மீதான பதவி இடை நீக்க அறிவிப்பில் அவர் குறிப்பிடவில்லை.

இந்த அறிவிப்பானது ஆதவ் அர்ஜுனாவின் வழித்தடத்தை உடனடியாக வேறு கட்சிக்குப் பக்கம் மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்த போது தலைவரின் கையெழுத்தோடு ஒரு கடிதம் வந்த போ இருந்த அதே மனநிலையில்தான் பதவி இடை நீக்க கடிதத்தையும் மனதார ஏற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவரின் போராட்டத்துக்கான ஆதரவு மங்கிப் போய்விட்டது என்று அர்த்தமல்ல. இவரது வழிகாட்டுதலால் உருவான மாற்றங்கள், கட்சியின் அடிப்படை விழுமியங்களையும் அவற்றின் மீதான வலிமையையும் வாக்கு வெற்றியின் மூலம் இன்றளவும் பறைசாற்றுகின்றன.

அவர் வேலைய தொடர்வார்!”

சமுதாய மேம்பாட்டிற்காக அவர் எடுத்த முயற்சிகள் முன்னுதாரணமாக விளங்குகின்றன.

கட்சி அரசியலின் வட்டத்திலிருந்து அவர் வெளியேறியிருந்தாலும், சமுதாய மாற்றத்திற்காக அவர் எப்போதும் தனது பங்களிப்பை தொடர்வார் என்று அவருடன் பழகிய அடிமட்ட தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அர்ஜுனாவின் நேர்மை, மக்கள் நலன் மீதான அர்ப்பணிப்பு, மற்றும் சமூக உரிமைகளுக்கான அவரது ஒப்பற்ற பங்களிப்பு வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெறுமா என்பதே பொறுத்திருந்து பார்க்கலாம்.

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள ‘த காரிகை’யின் சமூக வலைதள பக்கங்களையும் பின் தொடருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Instagram
YOUTUBE