கலைஞர் மகளிர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் பற்றிய முழு விவரங்களை த காரிகை உங்களுக்கு வழங்குகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

21 வயது நிரம்பி இருக்க வேண்டும்

குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடையில் விண்ணப்ப பதிவு முகாம் நடக்கும்

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு 14 மட்டுமே விண்ணப்பிக்கலாம்

குடும்பத் தலைவி வரையறை

குடும்ப அட்டையில் உள்ள பெயர் அனைத்தும் ஒரு குடும்பமாக கருதப்படும்

குடும்பத் தலைவியே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முடியும்

குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்ட பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார்

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரின் மனைவியே குடும்ப தலைவி

திருமணமாக தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியே

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால்
ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத் தகுதி

ஆண்டு வருமானம் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்

5 ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலம் 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும்

ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி இருக்க வேண்டும்

யாருக்கெல்லாம் தகுதி இல்லை

ஆண்டு வருவாய் குடும்பத்திற்கு ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருப்பவர்கள்

வருமான வரி, செலுத்துபவர்கள்

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்

மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்

சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனம் வைத்திருப்போர்

ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் என அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்

விதிவிலக்குகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவி தொகை பெறும் உறுப்பினரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவை.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE