IQ பரிசோதனை யாருக்கெல்லாம் அவசியம்? எப்படி தெரிந்துகொள்வது?

பிறந்ததும் குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழந்தைக்கு ஏதும் பிரச்னை இருந்தால் கண்டறிந்துவிடுவார்கள். 3 அல்லது 5 வயதுக்கு மேல் அல்லது எந்த வயதிலும் கூட இத்தகைய குழந்தைகளுக்கு IQ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களின் மனநலம் பற்றி அறிந்துகொள்ளலாம். இது தலைமை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற்று பயனடையலாம்.
இன்டலெக்சுவல் அதாவது அறிவாற்றல் எனப்படுவது காரணம் அறிதல், பிரச்சனைகளை தீர்த்தல், கல்வி கற்றல், திட்டமிடுதல், யோசித்தல், நீதி காணுதல், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்ற படிநிலைகளின் கீழ் அறியப்படும். இவற்றை சரியாக பின்பற்றாத குழந்தைகள் அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளாக அறியப்படுபவர்கள்
சில குழந்தைகள் வளர்ந்த பின்பும் கூட குளிப்பது, உடை அணிந்து கொள்வது, சாப்பிடுவது வழக்கமான பணிகளை செய்வது, அடிப்படையாக சமைப்பது, துவைப்பது, போக்குவரத்தை பயன்படுத்துவது ஆகியவற்றில் குறைகள் இருக்கலாம்
சில குழந்தைகளுக்கு புதிதாக கற்றுக் கொள்ளுதல் திறன்களை வளர்த்தல் பெரிய அளவு வழிகாட்டுதல் இன்றி தானாகவே செயல் திறன்களை மேற்கொள்வது ஆகியவை சிரமம் இருக்கலாம்

10 வயது குழந்தை 5 வயது குழந்தையை போல் பேசுவது இதற்கு உதாரணம்.

லேசான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 52-55 முதல் 70)

  1. 5 முதல் 6 வகுப்புக்கு மேல் படிப்பில் சிரமம்
  2. பேசுவது தாமதம் ஆகலாம் ஆனால் கற்றுக்கொண்ட பின் பிறருடன் தொடர்பு கொண்டு பேசுவது மேம்படலாம்.
  3. தன்னை தானே பார்த்துக் கொள்வது பராமரித்துக் கொள்வதில் முழுமையான சுதந்திரம் இருக்கும்
  4. படித்தல் மற்றும் எழுதலில் சிரமம் இருக்கும்
  5. சமூகத்தில் பக்குவமின்மை இருக்கும்
  6. திருமணம், குழந்தை வளர்ப்பு, பெற்றோராக கடமை ஆற்றும் பொறுப்புகளில் இயலாமை இருக்கும்.

மிதமான அறிவு திறன் குறைபாடு (IQ மதிப்பு 35 – 42 முதல் 52 – 55)

  1. 2ம் வகுப்புக்குமேல் கல்வி கற்பதில் சிரமம்
  2. மொழியை புரிந்து கொள்வதில் மெதுவாக செயல்படுவார்கள்
  3. பேசுவதிலும் பழகுவதிலும் குறைந்த திறன் இருக்கும்
  4. சாதாரணமாக படித்தல் எழுதுதல் எண்ணுதல் சாத்தியமாக இருக்கும்
  5. தனித்து சுதந்திரமாக வாழ்வது, இயங்குவதில் சிரமம்
  6. ஏற்கனவே தெரிந்த இடங்களுக்கு மட்டும்தான் சிரமம் இன்றி பயணிக்க முடியும்.

தீவிர அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 முதல் 35 – 40)

  1. பேசுவதிலும் மோட்டார் டெவலப்மென்ட் என்ற பொருட்களை கையாளுவதில் சிரமம் இருக்கும்
  2. பாதுகாப்பான சூழலில் மருத்துவ உதவியோடு தான் வாழ முடியும்
  3. வெகு சில வார்த்தைகள் மட்டுமே புரியும்.

ஆழமான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 க்கு கீழ்)

  1. பிறர் என்ன சொல்கிறார்கள் என்று புரியாது
  2. நரம்பு குறைபாட்டால் அசாதாரணமாக இருப்பார்கள்
  3. சுதந்திரமாக செயல்படுவது சாத்தியமில்லை
  4. எப்போதும் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டியது அவசியம்

அறிவுசார் குறைபாடு வரக் காரணம் என்ன?

மரபணு, கர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அம்மை, மூளைக்காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற உடல்நல குறைபாடுகள் இதற்கு காரணமாக அமையலாம்.

குறிப்பாக பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல்களைக் கொடுக்கும் போதும், அவர்களின் மன நலன் பாதிக்கப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையின் மனநலனும் பாதிக்கப்பட கூடும்.

104 என்ற எண்ணில் இலசவ மனநல ஆலோசனை

குழந்தைகளை மனநல மருத்துவர்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏதும் தடைகள் இருந்தால், 24 மணி நேரமும் செயல்படும் 104 என்ற அரசின் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை மைய எண்ணை அழைத்து, தங்களின் பிரச்னைகளைக் கூறவேண்டும். எவ்வளவு நேரமாயினும் மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு உங்களுக்கான வழிகாட்டு முறைகளை அனுபவம்வாய்ந்த மருத்துவர்கள் பகிர்வார்கள்.
மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை எழுதி வைத்துக் கொண்டு பின்பற்றி, அவர்கள் சொல்லும் காலகட்டத்துக்குப் பின் மீண்டும் 104 என்ற எண்ணை அழைத்து அதே மருத்துவரின் பெயரைச் சொல்லி பேச வேண்டும் எனக் கூறினால் அவர்கள் இணைப்பை வழங்குவார்கள். எத்தகைய சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள், மன சங்கடங்களையும் தயக்கமின்றி பகிர்ந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE