பிரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் பண்ணா உங்க உடம்புல என்ன நடக்கும்?

காலை உணவு என்பது யாருமே தவிர்க்க கூடாத உணவு. ஏனெனில் இரவு முழுக்க நீண்ட நேரம் அதாவது அதிகபட்சம் 8 மணி நேரத்துக்கு மேல் பட்டினி கிடந்து அந்த உடலுக்கு உணவை கொடுப்பது அவசியம்.

ஆனால், தங்களுடைய பணி, கடமைகள், சூழல் காரணமாக பலரும் பிரேக்ஃபாஸ்ட்டை ஸ்கிப் செய்து விடுகின்றனர்.

அப்படி தினமும் அல்லது அடிக்கடி பிரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் செய்யும் போது உங்களது உடலில் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

நீண்ட நேரம் பட்டினியோடு இருந்து காலையில் சாப்பிடாத போது உங்களுக்கு எனர்ஜி குறையும். இதன் காரணமாக நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முழுமையாக கான்சன்ட்ரேட் செய்யவும், ப்ரொடக்டிவிட்டியாக வேலை செய்யவும் முடியாது.

இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை பிளக்ஸ்வேட்டாக செய்துவிடும். இதன் விளைவாக விரைவில் டைப் 2 டையபடீஸ் வரலாம். சர்க்கரை நோய் என்பது உடலில் அனைத்து விதமான நோய்களுக்கும் கதவை திறந்து விடும் ஒரு மோசமான நோய் என்பதை தெரிந்து கொள்ளவும்.

உடல் பருமன்

சாப்பிடாவிட்டால் உடல் எடை குறையும் என பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையில், சாப்பிடாவிட்டால் உடல் எடை கூடும். நீங்கள் காலை வேளையில் பிரேக்ஃபாஸ்டை ஸ்கிப் செய்த பின்பு அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கலோரிகள் உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் சாப்பிட்டு விடுவீர்கள். இதன் காரணமாக வழக்கத்தை விட உங்களது எடையானது கூடி விடும்.

உங்களது உடலானது நீங்கள் சாப்பிடாத நேரத்தில் எனர்ஜியை எரித்து உங்களை இயங்க வைக்கும். எனவே காலை வேளையில் நீங்கள் சாப்பிடாத போது உணவு தேவையானது குறைந்து அது மெட்டபாலிசத்தை கடுமையாக பாதிக்கும்.

உடலில் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் ஒவ்வொரு பாகத்தை திறம்பட இயங்க வைக்கும். அப்படி நீங்கள் காலை வேளையில் சாப்பிடாத போது உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது உடலில் அனைத்து பாகங்களையும் கடுமையாக பாதிக்கும் ஒரு முக்கியமான செயலாகும்.

காலை வேலையில் சாப்பிடாத போது உங்களது ஹார்மோன் பாதிக்கும். இது உங்கள் பசி உணர்வை குறைத்து தினமும் பசிக்காதது போன்ற உணர்வையே உங்களுக்கு தந்துவிடும்.

நீங்கள் ஒரு அத்லட் ஆகவோ அல்லது உடல் உழைப்பை போட்டு வீட்டிலேயோ, வெளியிலேயோ பணி செய்யும் நபராகவோ இருந்தால் உங்களுடைய பெர்ஃபார்மன்ஸ் குறையும்.

தினமும் அல்லது அடிக்கடி பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடாத நபர்களுக்கு இதயும் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் வரும் என்றும் இது கொழுப்பு சத்தின் அளவை பாதித்து இதயத்தின் செயல்பாட்டை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் என்றும் பல ஆய்வுகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE