கார்த்திகையை முன்தள்ளி மார்கழி வெகு வேகமாக நம்மைக் குளிரில் நடுங்கவைக்க வருகிறது. மழையால் வரும் குளிரிலேயே சிலர் தங்களை குளிரில் இருந்து காத்துக் கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் மார்கழிப் பனியும் அதிகம் வைத்துச் செய்யக் காத்திருக்கிறது.

பொதுவாக இந்த சமயத்தில் ஆரஞ்சுப் பழ சீசன் ஆன போதும் பலரும் அதை விரும்பி வாங்க மாட்டார்கள். கேட்டால் சளிப் பிடித்துவிடும் என்ற அச்சம் தான். ஆனால், ஆரஞ்சின் நன்மைகளும் தீமைகளும் இதில் உள்ளன.

பொதுவாகவே மழை மற்றும் குளிர் காலத்தில் சூரியக் கதிர்கள் குறைவாகவே பூமியில் படும். மழை மேகங்களும், பனி மூட்டங்களும் அதனை மறைக்க முயலும். இதனால் மனிதர்களுக்கு நாள்தோறும் கிடைக்க வேண்டிய விட்டமின் சி ஆனது கிடைக்காமல் போகும். எனவே, அந்தப் பற்றாக்குறையை நீக்க ஆரஞ்சுப் பழம் உங்களுக்கு உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கி குளிர்காலத்தில் உங்களுக்கு வரும் சளி மற்றும் ஃபுளூவின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள உதவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஃபைபர் என்ற நார்ச்சத்து அதிகம் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பை குறைக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சுப் பழத்தை ஜூசாக பருகாமல், அப்படியே உரித்து சுளையாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

ஆரஞ்சுப் பழமானது உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே, தோல் வறண்டு அதில் இருந்து எரிச்சல், ரத்தம் கசியும் நிலை வராது இருக்கும்.

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியானது ஆன்டி ஆக்சிடன்ட், ஃபைபர், விட்டமின், மினரல் மற்றும் செல்களின் ஆரோக்யத்தை ஆரஞ்சு மேம்படுத்தும் என்பதால் உள்ளிட்டவை ஒட்டு மொத்தமாக உங்களது ஆரோக்யத்தை மேம்படுத்தும்.

அதேபோல், ஏற்கெனவே சிட்ரஸ் அலர்ஜி இருப்பவர்களும், கிட்னி பிரச்னை இருப்பவர்களும் ஆரஞ்சுப் பழங்களை அவாய்ட் செய்வது நல்லது. அதேபோல், தினமும் ஆரஞ்சுப் பழத்தையோ, அதன் சாறையோ பருகுவது, பற்களின் ஈறுகள் தொடர்ந்து சிட்ரஸ் ஆல் பாதிக்கப்படக் கூடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஆரஞ்சுப் பழங்கள் எக்கச்சக்கமான நன்மைகளை கொண்டிருந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE