இன்றைய தலைமுறை குழந்தைகள் கூட இளையராஜாவின் மெல்லிசையைக் கேட்டால் மதி மயங்கி உறங்கிவிடும்.

அப்படி இசைத்துறையில் ஒரு மாயாஜால வித்தையைக் கொண்டு தனது ரசிகர்களை கட்டுண்டு வைத்திருப்பவர் தான் ராசையா.

அது யாரது? புதிதாக ராசையா என்கிறீர்களா?

ராசையா தான் இளையராஜாவின் உண்மையான பெயர். திரைத் துறையில் அவரை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் அவர்கள் ஏற்கனவே அப்போது பி எம் ராஜா என்ற ஒரு பிரபலமான இசையமைப்பாளர் இருந்ததால், ராசையாவை இளையராஜா என அறிமுகப்படுத்தினார்.

இளையராஜா பல பாடல்களை ஏற்கனவே சினிமா, நாடகம், கம்யூனிஸ்ட் கூட்டங்கள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில், இசையமைத்திருந்தாலும், முதன்முதலாக 1976-ல் அன்னக்கிளி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தான் சினிமாவில் வெளியானது.

அந்தப் படத்தில் “மச்சானப் பாத்தீங்களா? மலை வாழை தோப்புக்குள்ள?” என்ற நாட்டுப்புற கவிதை கலந்த மிக இயல்பான பாடல் ரசிகர்களை முதல் படத்திலேயே அவர் வசம் இழுத்துக் கொண்டது. அதன் பின் 20-30 ஆண்டுகளாக இசையில் ராஜாவின் சாம்ராஜ்யம் தான்.

இளையராஜா இசை என்றால் படம் சரியில்லாவிட்டால் கூட பாடலுக்காக தியேட்டர்களுக்கு வந்த ஆடியன்ஸ் கூட்டம் அதிகம்.

அதேபோல் தான் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், மோகன், சரத்குமார் என பல ஹீரோக்களின் வெற்றிக்கும் இளையராஜா தேவைப்பட்டார்.

அப்படி திரையுலகில் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா, தற்போது அனிருத் காலத்தில் கூட எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் என்பதில் மிகை இல்லை.

ஆனால் ஒரு சாமானியனை எப்படி இசை உலகம் தன்வசம் ஈர்த்தது? எந்த பாடல் அவரை இசைத்துறைக்குள் இழுத்து வந்தது? என அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை “த காரிகை” உங்களுக்கு வழங்குகிறது..

சிறுவயதில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது கரண்ட் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு ஒலிபெருக்கியில் “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” என்ற பாடல் ஒலித்தது.

பள்ளி சென்று கொண்டிருந்த நான் அப்படியே ஒரு கணம் நின்று விட்டேன். என்னை மறந்து அந்த இசையை ரசிக்க தொடங்கி விட்டேன். கண்ணதாசன் எழுதி எம் எஸ் வி இசையமைப்பில் உருவான அந்த பாடல் என்னை இசைத்துறைக்குள் இழுத்து வந்து விட்டது. அந்தப் பாடல் மீது இருந்த அதே ஆர்வம் தான் இசைக்கருவிகளை கற்கத் தோன்றியது. அதன்பின் ஆர்கெஸ்ட்ரா கம்யூனிஸ்ட் கூட்டம் திருமண விழாக்களில் இசையமைத்து வந்தேன்.

நானும் என் சகோதரர்கலோடு இசைத் துறையில் இருந்தோம். என் நண்பன் பாரதிராஜா கிராமங்களில் நாடகங்களை போட்டு பின்பு இயக்குனராகும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்து சினிமாவில் சேர்ந்தார். அதன் பின்பு பல சினிமா வாய்ப்புகள் வந்த போதும் முதன்முதலாக சிவக்குமார் நடித்த அன்னக்கிளி படத்தில் நான் இசையமைத்த பாடல்கள் வெளியாகி மெகா ஹிட் அடித்தன” என்று கூறியுள்ளார்.

இளையராஜாவின் இசையில் உங்களுக்கு பிடித்த டாப் 5 பிளே லிஸ்ட் பாடல்கள் என்னென்ன என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE