90-ஸ் கிட்ஸ்களின் காலத்தில் சின்னக் குழந்தைகள் கதாப்பாத்திரம் என்றால், மாஸ்டர் மகேந்திரனும், கல்யாணியும்தான் அதிகம் இருப்பார்கள். பல சுட்டியான கதாப்பாத்திரத்தில் நடித்த குட்டிப்பாப்பா கல்யாணிக்கே தற்போது 5 வயதில் ஒரு குட்டிப்பாப்பா உள்ளதாம். ஆனால், இன்னும் குழந்தையாகவே அவர் 90-ஸ் கிட்ஸ்களால் பாவிக்கப்படுகிறார்.

தாய் தற்கொலை

கல்யாணியின் தாய் 2014-ல் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்ய முயன்ற அவரை மீட்டுக் கொண்டுவந்த மருத்துவரையே மணம் முடித்தார். தற்போதும் தற்கொலைக்கு எதிரான பிரச்சாரங்களில் அவர் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார். ஏதேனும் திரைப்படங்களில் தற்கொலையைத் தூண்டும் விதமாக காட்சிகள் இருந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுப்பவராக கல்யாணி செயல்பட்டு வருகிறார். Change.Org மூலம் இதுபோன்ற எதிர்ப்புக்குரல்களுக்கு அணி திரட்டியும் வருகிறார். திரைத்துறையில் பெருமளவு ஆக்டிவாக இல்லாவிட்டாலும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இன்ஃபுளூயன்சராக இருக்கிறார்.

அறுவைசிகிச்சை

சில ஆண்களுக்கு முன் அவருக்கு முதுகுத் தண்டில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்ததும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நவ்யா என்ற அந்த குட்டிப்பாப்பாவையும் கல்யாணி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார். அனைத்தும் நன்றாகச் சென்றுகொண்டிருந்தபோதுதான் முதுகு வலி அதிகரித்து இருக்கிறது. மருத்துவரிடம் பரிசோதித்ததில் இதற்கு முன்பு நடைபெற்ற அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் ஆபரேசன்

எனவே, மீண்டும் முதுகுத்தண்டில் வைத்த பழைய பிளேட், ஸ்க்ரூ ஆகியவற்றை எடுத்துவிட்டு, மீண்டும் எலும்பை வைத்து ஆபரேசன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், முன்பைப் போல் அல்லாமல், இந்த ஆபரேசனில் இருந்து மீள வெகு காலம் எடுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உடன் நின்ற குடும்பம்

கல்யாணி தாயை இழந்து தவித்தபோது உறுதுணையாக உடன் நின்ற தனது கணவரை மணம் முடித்தார். பின் தன் மகள் தான் தன்னை மிகவும் ஸ்ட்ராங்கான பெண்ணாக மாற்றிவிட்டதாக அவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இவர்கள்தான் தன்னை முழுமையாக ஓய்வெடுக்கவும் சிகிச்சையில் இருந்து மீண்டு வரவும் உறுதுணையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி. தனக்காக பிரார்த்திக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் நலம் பெற த காரிகையும் வாழ்த்துகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE