தமிழ் படங்களைப் போன்று தற்போது சிறந்த மலையாள திரைப்படங்கள் தமிழகத்தில் சிறப்பான வரவேற்பை சமீப காலங்களில் பெற்று வருகிறது.

பிரச்சனையின் தொடக்க புள்ளி

கேரளத்துறை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருந்த போதும் ஒரு முக்கியமான நடிகைகள் ஏற்பட்ட பாலியல் தொல்லையானது மிகப்பெரும் சர்ச்சையாக இந்திய அளவில் பேசப்பட்டது.

ஒரு பிரபல நடிகைக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்விக்குறி எழுந்தது.

திரையுலகை உலுக்கிய சம்பவம்

தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை மீது கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலியல் ரீதியான தாக்குதல் இந்த பிரச்சினைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இதில் கேரள சினிமாவின் முன்னணி நடிகர் திலீப் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து சினிமா துறையில் பெண்களின் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுந்ததால் பிரபல நடிகை முதல் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்ட் வரை அனைத்து மட்டத்திலும் பெண்களிடம் விசாரணை நடத்தி நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது.

அறிக்கையில் என்ன இருந்தது?

பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக உடன்பட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.

ஹோட்டல் அறைகளில் தொல்லை

தங்கள் அனுமதி இன்றி ஹோட்டல் அறைகளில் ஆண் சகாக்கள் நுழைவார்கள் என்றும் காவல்துறையில் புகார் அளிக்க முற்பட்டால் சினிமாவில் தடை விதித்துவிடுவோம் என மிரட்டுவார்கள் என்றும் பெண்கள் கூறியுள்ளனர்.

திரைப்படம் எடுக்கும் செட் அருகே தங்குவதற்காக ஏற்பாடு செய்து தரப்படும் இடம் பாதுகாப்பாக இருக்காது என்றும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் குடும்பத்தினருடன்தான் செட்டில் இருப்போம் என்றும் பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

டாய்லெட் கூட இல்லாத கொடுமை

மாதவிடாய் காலங்களில் பெண் கலைஞர்கள் கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர். சிறுநீர் போகாமல் இருக்க நீண்ட காலத்திற்கு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க பெண்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகள்

மலையாள திரை உலகம் தானே என்று அஜாக்கிரதையாக இருக்க முடியாது. ஏனெனில் நமது தமிழ் நடிகைகள் பலரும் அங்கிருந்து வந்தவர்கள் தான்.

நயன்தாரா, அசின், அமலா பால், கீர்த்தி சுரேஷ் தொடங்கி சாய் பல்லவி, நிகிலா விமல், அன்னா பென் வரை பலர் கேரளா தேசத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

நடிகர் நடிகைகள் என்ன சொல்றாங்க?

ஹேமா கமிட்டியின் அறிக்கையை வெளியே கொண்டுவரவே பல ஆண்டுகளாக போராடியதாகவும், ஆனால் அந்த அறிக்கையில் உள்ள சர்ச்சையான கருத்தை மட்டும் பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என நடிகை பார்வதி கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த கேரள திரையுலகையும் குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது, இது என்னை மிகவும் ஹர்ட் செய்கிறது என்ற நடிகர் டோவினோ தாமஸ் கூறியுள்ளார்.

சினிமாத்துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக 2018-ம் ஆண்டு மே மாதம், நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. அந்த கமிஷனில் நடிகர் சாரதா, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE