தலையில் பலருக்கும் இரட்டைச் சுழி இருக்காது. ஆனால் உலக மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே இரட்டைச் சுழி இருப்பதாக NHGRI நடத்திய ஆய்வின்படி தெரிய வந்துள்ளதாம்.

குழந்தைகளுக்கு இரட்டைச் சுழி இருந்தாலே அவர்கள் மிகவும் குறும்பானவர்கள், ஒரு இடத்தில் அடங்க மாட்டார்கள், சிறுவனாக இருக்கும் போது உடன்பிறந்தோரை அதிக அளவு அடிப்பார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு.

அத்தகைய குறும்பை கண்டிக்கும் அம்மா மார்களிடம் பாட்டிமார்கள் அவனுக்கு இரட்டைச் சூழி இருக்கிறது அப்படித்தான் இருப்பான், அவனை எதற்காக அடிக்கிறாய்? என்றெல்லாம் முட்டுக் கொடுப்பார்கள்.

ஆனால் உண்மையிலேயே இரட்டைச் சுழி இருப்பது எதை உணர்த்துகிறது? என்று “த காரிகை”-யின் கட்டுரையில் பார்க்கலாம்.

இரட்டைச் சுழி இருப்பது மரபணு வழி வருவது என்று கூறப்படுகிறது. பொதுவாக தாத்தா, பாட்டி என யாருக்கேனும் முன்னோர்களுக்கு இப்படி இரட்டைச் சுழி இருந்திருந்தால் குழந்தைகளுக்கும் இரட்டைச் சுழி வந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, அறிவியல் படி இரட்டைச் சுழி என்பது மரபணு சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

2 திருமணம் நடக்குமா?

இரட்டைச் சுழி இருப்பவர்களுக்கு 2 திருமணம் நடக்கும். முதல் திருமணம் நிச்சயம் முடிந்ததும் நின்று விட்டு இரண்டாவதாக அமையும் வரன் மணம் முடிக்க வாய்ப்புண்டு என்றெல்லாம் வயதானவர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், இதன் பின்னணியில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோ ஆய்வுகளோ ஏதுமில்லை.

வேண்டாத குறும்பெல்லாம் செய்வார்களா?

இரட்டைச் சுழி உள்ள சிறுவர்கள் வேண்டாத குறும்புகளை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்வார்களாம். உதாரணத்துக்கு மொட்டை மாடியில் விளிம்பில் நடப்பது, அடுத்தவர் வீட்டு ஓட்டின் மேல் கல் எறிவது, உயரத்தில் இருந்து குதிப்பது, கிடைக்கும் பொருட்களை உடைத்து வேடிக்கை பார்ப்பது, சேட்டைகள் செய்துவிட்டு அடுத்தவரை கோர்த்து விடுவது என பல்வேறு குறும்புகளை அவர்கள் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் ஏதுமில்லை.

ஜோதிடம் என்ன சொல்கிறது?

ஜோதிடத்தின் படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது என்றால் அவர்கள் நேரடியாக எதையும் பேசுவார்கள். மிகவும் பொறுமையானவர்கள். எல்லாரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர் என்றும் சொல்லப்படுகிறது. யாருக்கேனும் கஷ்டம் என்றால் முதலில் ஓடிவந்து நிற்பார்கள் என்றும் இது போன்ற குணாதிசயங்கள் தான் இரட்டைச் சுழி இருப்பவர்கள் வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்கள் உறுதி செய்து கொள்வார்கள் என்றும் ஜோதிடத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

Facebook
Instagram
YOUTUBE