தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா,. ஆனால் ஒரே ஒரு படத்தினால் அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் தள்ளிப்போனது. அந்த படத்தின் பெயர் “சைஸ் ஜீரோ”. இந்த படத்துக்காக தாறுமாறாக நடிகை அனுஷ்கா எடையை கூட்டினார். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் அவரால் பழைய உடல் நிலைக்கு மீண்டும் திரும்ப முடியாமல் போனது. இதை நினைத்து பலமுறை வருத்தப்பட்டதாக அவரே பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். பின் தீவிர முயற்சிகளின் பலனாக தனது எடையை குறைத்து ஒல்லியானார் அனுஷ்கா. அவரது சீக்ரெட் எடை குறைப்பு காரணம் என்ன? என்பதை “த காரிகை”-யின் கட்டுரையில் தற்போது பார்க்கலாம்.

யோகா

நடிகை அனுஷ்காவுடைய தாயார் ஒரு யோகா டீச்சர். அதனால் பல்வேறு முயற்சிகளில் எடையை குறைத்து முடியாது போன அனுஷ்காவுக்கு கை கொடுத்தது அவரது அம்மா தான். அதிலும் குறிப்பாக அவரது அம்மா கற்றுக் கொடுத்த யோகக் கலை பயிற்சி வெகுவாக எடை குறைப்புக்கு உதவியதாம்.

எவ்வளவு நேரம் பயிற்சி

நடிகை அனுஷ்கா ஷூட்டிங் போக ஒரு நாளைக்கு 4 மணி நேரம் யோகாவில் செலவிட்டாராம். காலை 2 மணி நேரமும் மாலை 2 மணி நேரம் என தினமும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தாராம்.

உணவு கட்டுப்பாடு

என்னதான் யோகா உடற்பயிற்சி செய்தாலும் உணவு கட்டுப்பாடு இன்றி ஒருவரால் எடையை குறைக்க முடியாது. எனவே அனுஷ்கா தனக்கே உரிய பல்வேறு டயட்களை பாலோ செய்தார்.

என்னென்ன உணவுகள்?

நடிகை அனுஷ்கா அதிகம் நீர்ச்சத்து அடங்கிய உணவுகளையே எடுத்துக் கொண்டாராம். அவற்றையும் ஜூஸ் வடிவில் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ் ஆகியவற்றைப் பருகி தனது எடையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளாராம் அனுஷ்கா.

ஒரு நாளைக்கு 6 வேளை

3 வேளை சாப்பிட்டாலே உடல் ஏறும் நிலையில் 6 வேளை சாப்பிட்டு உடலை குறைத்தாரா? என்று கேட்டால் ஆம், நிச்சயமாக!. மொத்தம் 3 வேளை சாப்பிட வேண்டிய உணவுகளை 6 வேளையாக சிறிது சிறிதாக பிரித்து எடுத்துக் கொண்டாராம். ஒரு குழந்தை எவ்வளவு சாப்பிடுமோ அந்த அளவுக்கு தான் 6 வேளையும் அவர் உணவு எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

உணவு உண்ணும் நேரம்

6 வேளை உணவெடுத்துக் கொண்டாலும் எந்த எந்த வேலைக்கான உணவை எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்? எப்போது எடுத்துக் கொள்ளக் கூடாது? என்ற கட்டுப்பாட்டு விதிகளை அவர் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ பண்ணினாராம். இரவு 8 மணிக்குள் டின்னரை முடித்து படுத்து விடுவாராம். அடுத்த வேலைக்கான உணவு மறுநாள் காலை 10 மணிக்கு மேல் தானாம். இப்படி உணவுக்கான நேர மேலாண்மையை சரியாகப் பின்பற்றியதால்தான் தனது தொப்பையை குறைக்க முடிந்ததாக அனுஷ்கா பகிர்ந்துள்ளார்

சைவத்துக்கு மாறினார் அனுஷ்கா

அனுஷ்கா முடிந்தவரை வெயிட் லாஸுக்கான உணவுகளை சைவமாக மட்டுமே எடுத்துக் கொண்டாராம். கடைகளில் வாங்கிய ரசாயனம் தெளித்த காய்கறிகளை விட வீட்டிலேயே விளையும் காய்கறிகளை ஃபிரஷ்ஷாக பறித்து சமைத்து உணவில் சேர்த்துக் கொண்டாராம் அனுஷ்கா.

அனுஷ்காவின் இதுபோன்ற கண்டிப்பான லைஃப் ஸ்டைல் மாற்றங்கள் அவரது எடை குறைப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. அவருக்கு மீண்டும் வாய்ப்புகளும் வரிசை கட்டி நிற்பதாக திரைத்துறை வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூகவலைதளங்களையும் பின் தொடருங்கள்!

Facebook
Instagram
YOUTUBE