கழிவறையை விட வாட்டர் பாட்டில் மோசமாம்!

வாயில் வைத்து ஒட்டியோ, உறிஞ்சியோ குடிக்கும் வாட்டர் பாட்டில்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சூடான தண்ணீரில் சோப்பு போட்டு கழுவியாக வேண்டுமாம்.

Sipping water bottle

பெரும்பாலானோர் தாங்கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களை அவ்வளவு எளிதில் தூக்கி போடுவதில்லை. மீண்டும் அதையே தண்ணீர் நிரப்பி பயன்படுத்துகின்றனர். மறுபயன்பாட்டுக்கு உரிய வாட்டர் பாட்டில்களுக்கும், ஒருமுறை பயன்பாட்டில் உள்ள வாட்டர் பாட்டில்களுக்கும் இதே நிலைதான்.

அன்றாட வாழ்வில் தினந்தோறும் பயன்படுத்தும் இந்த வாட்டர் பாட்டில்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

Girl Sipping water

என்ன ஆய்வு?

அமெரிக்காவின் WaterfilterGuru.com ஐ சேர்ந்த ஆய்வு குழு, பல்வேறு வகையான மூடிகளைக் கொண்ட வாட்டர் பாட்டில்களை பயன்பாட்டுக்கு அளித்து பின் ஆய்வு செய்தது. ஒவ்வொரு பாட்டிலையும் 3 முறை பரிசோதித்ததில் அவற்றில் கிராம் நெகட்டிவ் ரோட்ஸ் மற்றும் பேஸிலஸ் என்ற 2 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

எவ்வளவு கிருமிகள்?

சராசரியாக கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீரியாக் கிருமியை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியா கிருமிகளை கொண்டிருப்பதாக கண்டறிந்தார்கள்.

கிச்சன் சிங்கை விட 2 மடங்கு கிருமியும், கம்ப்யூட்டர் மவுசை விட 4 மடங்கு பாக்டீரியாவும், செல்லப்பிராணிகளின் உணவு கிண்ணத்தை விட 14 மடங்கு பாக்டீரியாவும் இருப்பதாக ஆய்வு முடிவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே தான் மறுமுறை பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள், சிப்பர்கள் உள்ளிட்டவற்ற ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் சோப்பு போட்டு சுடு தண்ணீரில் கழுவ வேண்டும்-னு சொல்லி இருக்காங்க.

இது குறித்து கருத்து தெரிவித்த லண்டன் இம்பீரியல் கல்லூரி மூலக்கூறு நுண்ணுயிரியலாளர் டாக்டர் ஆண்ட்ரூ எட்வார்ட்ஸ், குடிநீர் பாட்டிலில் நுண்ணுயிர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை என்று கூறியிருக்கிறார்.

Boy sipping water bottle

பாக்டீரியாக்கள் அதிக அளவில் பெருகும் இடமாக இருந்தாலும் அது அவ்வளவு ஆபத்தில்லை என்று குறிப்பிட்டு இருக்காரு. இது மாதிரியான தண்ணீர் பாட்டில் பயன்படுத்துவதனால் ஒருவர் நோய் வாய்பட்டு இறந்ததாக கேள்விப்படவே இல்ல அப்படின்னு சொல்லியும் விளக்கம் அளித்து இருக்கிறார்.

அடிக்கடி கழுவாத பாட்டில்களும் குழாய்களும் ஒரு பிரச்சனை அல்ல என்றும் மனிதர்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் தான் அதிக அளவில் பரவி வருவதால் வாயை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்றும் ரீடிங் பல்கலைக்கழக நுண்ணியராளர் டாக்டர் சைமன் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கும், அலுவலகங்களுக்கு செல்வோருக்கும் கொடுத்தனுப்பும் வாட்டர் பாட்டில்களையும், குழந்தைகளின் பால் பாட்டில், சிப்பர் உள்ளிட்டவற்றையும் ஸ்டெர்லைசர் கொண்டு தூய்மைப் படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஸ்டெர்லைசர் வாங்க வசதியில்லாதவர்கள், சுடுநீரில் கழுவினாலே போதும் என்றும் மீண்டும் அறிவுறுத்தி உள்ளனர்.

Facebook
Instagram
YOUTUBE