குளிக்கச் சென்ற இடத்தில் கொட்டிய குளவி. 2 உயிர் பலி. குளவியை எப்படி விரட்டுவது?

கோடை காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக விரைந்து கொண்டிருக்கிறது. அடித்துப் பிடித்து ஈ-பாஸ் வாங்கியாவது, உதகைக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் உதகையில் இருந்து அதிர்ச்சிகரத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனது நண்பரது வீட்டிற்குச் சென்று தங்கிய கோவை சித்தாபுதூரில் உள்ள குடும்பத்தினர் 9 பேர் சுற்றுலா என உதகையைச் சுற்றிப் பார்த்து வந்தனர்.

அவர்கள், தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைக்கு குளிக்கச் சென்றனர். அங்கு, இடி, மின்னலோடு மழை பெய்ததால் அங்கிருந்த குளவிக் கூடு களைந்தது. இதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்த 9 பேர் மீதும் பாய்ந்து கொட்டியதில், அவர்கள் படுகாயமடைந்தனர்.

இதைக் கண்டு பதறிய ஊர் மக்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 52 வயதான கார்த்திகேயனும், 54 வயதான ராஜ சேகரனும் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷமுறிவு சிகிச்சை அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. மேலும், உடல் நிலை மோசமடைந்த ஒருவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குளவி கூடு கட்டும் இடங்கள்

குளவி பெரும்பாலும் வீடுகளில் பயன்படுத்தாத இடங்களில்தான் கூடு கட்டும். அவைகள் பிள்வருமாறு

பெரும்பாலும் திறக்கப்படாத ஜன்னல் ஓரங்கள்
சுவர் விரிசல்கள், சுவரின் துவாரங்கள்
மேற்கூரைகள்
பறவைகளின் கூடுகள்
லாஃப்ட் எனப்படும் பரண்
வாகனங்கள் நிறுத்தப் பயன்படும் ஷெட்
பயன்படுத்தாத ஸ்டோர் ரூம், கேரேஜ்கள்

குளவியை விரட்டுவது ஆபத்து

ஒரு குளவியோ, தேனியோ, தான் வசிக்கும் கூட்டுக்கு ஆபத்து என்றால் மொய்த்து எடுத்துவிடும். கூட்டைக் களைத்தவரை ஒன்று சேர்ந்து தனது ஒற்றுமையால் வீழ்த்திவிடும்.
இது, சிலசமயம் உயிருக்கே ஆபத்தைக் கூட ஏற்படுத்திவிடலாம் என்பதால் கவனம் தேவை.

குளவிக் கூட்டை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி?

குளவிக் கூட்டை அகற்றத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்யாமல் அதனை பின்பற்றக்கூடாது. குளவிக் கூட்டை அகற்ற பூச்சியியல் சுத்தம் செய்யும் நிபுணர்கள் அழைக்கப்படலாம். அவர்கள், உங்களுக்கும், அருகில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி அகற்றி விடுவார்கள். கூடுஅ மிகப்பெரியதாக இருந்தால் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை அணுகலாம்.

அகற்றிய பின் என்ன செய்ய வேண்டும்?

spearmint, thyme, citronella, eucalyptus, மற்றும் wormwoodஅஆகியவற்றை பூச்சிக் கொல்லிகளாக அவை கூடுகட்டிய இடத்தில் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பெப்பர் மின்ட் ஆயில் என்ற எண்ணெயை குளவி கூடு கட்ட வாய்ப்புள்ள இடத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். இந்த வாடையானது குளவிக்கு பிடிக்காது என்பதால் அவை அங்கு கூடு கட்டாது.

lemongrass, கிராம்பு, geranium essential oil ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அந்த கூட்டின் மீது ஸ்பிரே செய்ய, அந்தக் கூட்டில் இனி வாசம் செய்யாது.

குளவிக்கு பொறி வைப்பது எப்படி?

2 லிட்டர் பாட்டிலை எடுத்து அதன் அடியில் சிறிய கீற்று போடவும். பாட்டிலுக்குள் சிறதளவு சர்க்கரைத் தண்ணீரை வைக்கவும். கீற்றுப் போட்ட விளிம்பில் எண்ணெய் தடவிவிட வேண்டும். இந்த சர்க்கரைத் தண்ணீரைப் பருக வரும் குளவிகளுக்கு அந்த கீற்றுப் போட்ட இடத்தில் உள்ள எண்ணெயானது வழுக்கிக் கொண்டு உள்ளே புக ஏதுவாக இருக்கும். வந்த வழியே வெளியேற முடியாதபடி போடக்கூடிய கீற்று மெலிதாக இருக்க வேண்டும். அந்த எண்ணெய் வளவளப்பு அதனால் வெளியேற முடியாத படி தடுக்கும். இந்த பாட்டிலை குளவிக்ள உலவும் இலடத்தில் தொங்க விட வேண்டும். பின் அந்த பாட்டிலில் சிக்கும் குழவிகளை எங்கேனும் வனத்தில் விடுவிக்கலாம். அல்லது அதனுள் சுடுதண்ணீர் ஊற்றி அழித்துவிடலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE