பள்ளியில் ஏதோ சரியில்லை என்ற எச்சரிக்கை அறிகுறிகள்
வளரும்போதும் ஒரே வகையான வயதினருடன் பள்ளியில் பழகும் போதும் குழந்தைகள் ஒரு சில சவால்களை எதிர்கொண்டு இருக்கலாம். அந்த சவால்கள் அவர்களது படிப்பிலும், கவனத்திலும், குணத்திலும் மாற்றங்களை ஏற்படுத்திருக்கலாம். அவை என்ன என்பதை ‘த காரிகை”-யின் சிறப்பு கட்டுரைகள் தற்போது பார்க்கலாம்.
குறிப்பாக பின்வரும் எவ்வளவு அறிகுறிகள் இதைக் குறிக்கும் என்று சில நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பல்வேறு குழந்தைகளின் அனுபவங்களின்படி கணக்கெடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் முழு விவரங்கள் இதோ.
கிரேடு குறைதல்
பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்களில் திடீரென அல்லது தொடர்ந்து மதிப்பெண் குறைவது இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமையும். பள்ளியில் ஏதோ ஒரு சிரமம் அவர்களுக்கு இருப்பதை இது உணர்த்துகிறது.
தொடர் புகார்கள்
பாடங்களை கவனிப்பதில்லை, வகுப்பில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை, ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்வதில் சிக்கல் இருக்கிறது என பள்ளிக்கு பிக்கப் செய்ய செய்யும் சொல்லும்போதோ, பேரன்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டிங்கிலோ தொடர்ந்து புகார்களாக வருவது அதிகரிக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு சிக்கலை குழந்தை எதிர்கொண்டு இருப்பதாக சொல்லலாம்.
பள்ளி வேலைகளை அவாய்ட் செய்வது
வீட்டுக்கு வந்தபின் வீட்டு பாடங்களை செய்வதிலோ, பிராஜக்ட்களை செய்வதிலோ அல்லது படிப்பதிலோ திணறல் இருக்கலாம்.
உணர்வு மாற்றம்
திடீரென கவனிக்கத்தக்க வகையில் Mood மாறுவதை அறிவதும் உணர்வு மாற்றம்தான். அதிகம் இரிடேட் ஆவது, பயம் கொள்வது, தன்னம்பிக்கை இழப்பது போன்றவை மேற்சொன்ன பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.
சமூகத்தில் இருந்து விலகுதல்
தனது பள்ளி குழந்தைகளோ அல்லது உறவினர் பக்கத்து வீடுகளில் வசிக்கும் நண்பர்களையோ சந்திக்கும் போது அவர்களுடன் கலந்து கொண்டு விளையாடாமல் எதிலும் பங்கேற்காமல் இருப்பதும் புதிதாக நண்பர்களை உருவாக்க முயல்வதில் சிக்கல் இருப்பதும் ஒரு முக்கிய பின் விளைவாக இருக்கலாம்.
ஒருங்கிணைப்பதில் சிரமம்
நேரத்தையும் திறன் மேம்பாட்டையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் இருக்கலாம். கொடுக்கும் அசைன்மென்ட்களை மறப்பது குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்காமல் இருப்பது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.
உடல்நலமின்மை
எவ்வித மருத்துவ காரணங்களும் இல்லாவிட்டாலும் அடிக்கடி தலைவலி, வயிற்று வலி உடல் அசவுகரியங்கள் இருப்பதாகச் சொன்னால் அதற்கு பள்ளியில் ஏதேனும் ஒரு சிக்கலை அவர்கள் எதிர் கொண்டு இருப்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை என்பதும் அர்த்தமாக இருக்கலாம்.
மேற்சொன்ன சிரமங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளும் இருந்தால் அதனை உடனடியாக களையும் முயற்சியில் இறங்கவும். குழந்தை இடம் மனம் விட்டு பேசி தெரிந்து கொள்ளலாம். அல்லது பள்ளியில் ஆசிரியர்கள், நண்பர்கள், மேலாண் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களுடன் பேசியும் பிரச்சனையின் வேரை அறியலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.