நடிகர் விஷால் – நடிகை லட்சுமிமேனன் ஆகியோர் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இது பற்றி நடிகர் விஷாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஷால்

செல்லமே படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். இதை அடுத்து சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் சங்க கட்டிடம் திறந்த பின்தான் தனக்கு திருமணம் என்றும் சபதம் எடுத்து இருந்தார்.

விஷால் – வரலட்சுமி காதல்?

நடிகர் விஷாலும் – வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த காதல் முறிந்ததாகவும் தகவல் வெளியானது.

விஷால் திருமணம் நிச்சயம்

இதை அடுத்து நடிகர் விஷாலும் மாடல் அழகியாக அறிமுகமாகி விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான அனிஷா அல்லா ரெட்டியை காதலிப்பதாக தகவல் வெளியானது. இவர்களுக்கு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதில், பல்வேறு திரைப் பிரபலங்களும் நடைபெற்றன.

நிச்சயம் முடிவுக்கு வந்தது?

ஆனால், திருமணம் பற்றி எழுத பேச்சும் எழுதாததால் இந்த திருமணம் நின்று விட்டதாக கருதப்பட்டது. இதை அடுத்து சில நாட்களில் வெளியான தகவலின் படி அனுஷா விஷால் உடைய கருத்துவேறுபாடு முற்றியதால் இருவரும் பிரிந்து விட்டதாகவும், அனுஷா வேறு ஒரு தொழிலதிபரை மணக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

விஷால் லட்சுமிமேனன் திருமணம்

இதனிடையே நடிகர் விஷாலுக்கும், லட்சுமிமேனனுக்கும் காதல் என மீண்டும் ஒரு தகவல் பரவியது. இந்த காதல் திருமணத்தில் முடியப்போவதாகவும், விரைவில் அது நடக்கும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இம்முறை மௌனம் களைத்தார் விஷால்.

விஷால் என்ன சொல்கிறார்?

“பொதுவாக என்னைப் பற்றிய வதந்திகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்பது என் நம்பிக்கை. ஆனால், நடிகை லட்சுமிமேனன் உடன் எனக்கு திருமணம் என வதந்தி சுற்றி வருவதை நான் கண்மூடித்தனமாக மறுக்கிறேன். இந்த தகவல் முழுக்க முழுக்க ஆதாரமற்றது. என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம் இதில் சம்பந்தப்பட்டவர் ஒரு நடிகை என்பதை விட அவர் ஒரு பெண் என்பதால் தான். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து அவருடைய அடையாளத்தை கடக்க நினைக்கிறீர்கள்.

விஷால் விளக்கம்

நான் எப்போது திருமணம் செய்யப் போகிறேன்? எந்த ஆண்டு திருமணம் செய்யப் போகிறேன்? எந்த தேதி? எந்த நேரம் ?யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்? என்று ஆய்வுகளெல்லாம் மேற்கொள்ள இது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.” என விளக்கம் அளித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE