திமிரு படத்தில் காலை நொண்டி நொண்டி வில்லி நடிகைக்கு வலது கை போல அட்டகாசமாக நடித்தவர்தான் விநாயகன்.

இதையடுத்து ஜெய்லர் படத்தில் சிறந்ததோரு வில்லன் கதாப்பாத்திரம் பெரிய பெரிய நடிகர்களுக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு என ஒட்டு மொத்த அதிர்ஷ்டமும் விநாயகனைத் தேடி வந்தது.
சுக்கிரன் உச்சம் போல அடுத்தடுத்து பட வாய்ப்புக்களும் கொட்டித் தீர்த்தது. வரிசையாக படங்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் கைதாகினார் விநாயகன்.


என்ன பிரச்னை?


நேற்று மதியம் அவரது வீட்டில் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை விசாரிக்க போலீசார் அழைக்கப்பட்டு இருந்தனர். அப்போது போலீஸ் ஸ்டேசன் சென்ற விநாயகன் புகைப்பிடித்தபடியே சென்றதோடு, பெண் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், காவல்நிலையத்தில் கூச்சல் குழப்பம் செய்து, ஒரு போலீசாரை அடித்ததாகவும், பணிகள் நடைபெற விடாமல் கெடுத்ததாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து கேரள போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்பு காவல்நிலையத்தில் வைத்து அவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகளும் வெளியாகின. கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனையில், அவருக்கு மது அருந்தியிருக்கிறாரா? என பரிசோதனை நடைபெற்றது. இதில் அவர் மது அருந்தியது உறுதியானது.


பின்பு நள்ளிரவு 10.30 மணியளவில் அவர் காவல்நிலையப் பிணையிலேயே விடுவிக்கப்பட்டார். விநாயகன் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே மறைந்த முன்னள் முதலமைச்சர் உம்மன்சாண்டி பற்றி அவதூறாகக் கருத்து தெரிவித்ததால் விநாயகன் வீடு புகுந்து அவரது ஆதரவாளர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர்.


அதுமட்டுமின்றி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவாவில் இருந்து கொச்சின் பயணித்தபோது சக பயணியை அப்யூஸ் செய்ததாக விநாயகன் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE