விசித்ரா சந்தித்த கேஸ்டிங் கவுச் விவகாரத்தால் மவுனித்தது சபை

குடித்து விட்டு வந்து எனது அறைக் கதவை பலமாகத் தட்டுவார்கள். இன்னமும் கூட அந்த சத்தம் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது.

‘ரஞ்சிதமே… ரஞ்சிதமே’ என்கிற பாடலுடன் நாள் 51 விடிந்தது. வீட்டில் பூகம்ப சத்தம் கேட்டது. அதில் பந்தை உருட்டி பொறுமையான கூடையில் போடும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதலில் வந்த தினேஷ், விஷ்ணு தோற்க, அடுத்து சென்ற மணி, நிக்ஷன் ஜெயித்தனர். 14 பேரில் 10 பேர் ஜெயித்தால்தான் வைல்ட் கார்ட் என்ட்ரி வருவார்களா? மாட்டார்களா? என்பது உறுதியாகும். ஆனால், விசித்ரா, அர்ச்சனா தோற்றதால் வீட்டுக்கு 3 பேர் வருவது உறுதியானது.

என்னை வில்லனாக காண்பிக்கிறாங்க. நான் பெட்டரான பிளேயர். ஆனா அர்ச்சனாவை ஹீரோவா காண்பிக்கிறாங்க. நினைக்க நினைக்க காண்டாகுது” என்று புலம்பலைத் தொடர்ந்தார் பூர்ணிமா.

மதிய உணவில் மெயின் மெனு சிக்கன். அசைவப் பழக்கம் இல்லாத சிலருக்கு மட்டும் bசய்த கேரட் பொரியல் மீந்து போக அதை விசித்ரா ஆளுக்கு ஒரு வாய் ஊட்டிக் கொண்டிருக்க, தனக்கு சிக்கன் வேண்டாம், தீர்ந்துபோன கேரட் பொறியல்தான் வேணும் என கூல் சுரேஷ் குழந்தை போல அடம்பிடித்தார்.

“வெஜிடேரியன்களுக்குன்னு தனியா செஞ்சிருக்காங்க. இருந்தா வாங்கிக்கங்க” என்று தினேஷ் முன்னெச்சரிக்கையாகச் சொன்னது சுரேஷ் மனதை காயப்படுத்தி அவரை குழந்தை போ அழச் செய்தது.

விஷ்ணு குறித்து இருவரும் சைகையில் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘அவன் நல்ல பையன்.. யோசிச்சு சொல்லுங்க. அவருக்கு உங்களைப் பிடிச்சிருக்கு” என்றார் மாயா.

‘உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பூகம்ப தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார் பிக் பாஸ்.முதலில் வந்த தினேஷ் தனது மணவாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவு பற்றி உருக்கமாகத் தெரிவித்தார். நீண்ட காலமாக அது சார்ந்த மன உளைச்சலிலும் பிரிவுத் துயரத்திலும் இருந்தவர் இப்போதுதான் தன்னை மெல்ல மீட்டு எடுக்கிறாராம். அவங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்திருக்கும்’ என்று ரக்ஷிதா தரப்பையும் தினேஷ் யோசித்து கூறினார்.

அடுத்து வந்து விசித்ரா பேசியது தான் ஹைலைட்டே. “2001-ல் இருந்து நான் சினிமாத்துறையில் இருந்து காணாமல் போனேன். யாருக்கும் அதற்கான காரணம் தெரியாது. ஒரு டாப் ஹீரோவின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அது தொடர்பான பார்ட்டியில் என்னை சந்தித்த அந்த நடிகர் – என் பெயர் கூட அவருக்கு தெரியாது – நீங்க இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டு விட்டு பிறகு ‘என் ரூமிற்கு வாருங்கள்’ என்று வெளிப்படையாகவே அழைத்தார். அன்றிரவு நான் என் அறைக்குள் படுத்து தூங்கி விட்டேன். மறுநாளில் இருந்து எனக்கு பிரச்சனைகள் ஆரம்பித்தன. குடித்து விட்டு வந்து எனது அறைக் கதவை பலமாக தட்டுவார்கள். இன்னமும் கூட அந்த சத்தம் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது” என்று விசித்ரா சொன்னபோது சபையில் அமைதி.

ஹோட்டலின் நிர்வாகத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு நல்ல மனிதர், நான் கேட்டுக் கொண்டபடி அறையை தினமும் மாற்றிக் கொடுத்தார். பிறகு ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஸ்டண்ட் நபர்களில் ஒருவர் என்னை தொடர்ச்சியாக தப்பாக தொட்டார். ஒரு கட்டத்தில் அவர் கையைப் பிடித்துக் கொண்டேன். ஸ்டண்ட் மாஸ்டரிடம் இது பற்றி புகார் செய்த போது அவர் என்னை பலமாக கன்னத்தில் அறைந்தார். எனக்கு கண்ணீர் வந்தது. திகைத்துப் போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பர்களிடம் போனில் கேட்டேன். ‘புகார் செய்யுங்கள்’ என்றார்கள் யூனியனில் கேட்ட போது “நீங்க நடிக்க வேண்டாம். திரும்பி வந்துடுங்க. ஒரு கடிதம் எழுதித் தாருங்கள்” என்று சொன்னார்கள்…. அதன்பின், 4 நாட்கள் கழித்து நீங்கள் காவல் நிலையத்திலேயே புகாரளிக்க வேண்டியதுதானே? எனக் கேட்டனர். அப்போது கன்னத்தில் வாங்கிய அறையின் சுவடுகளும் கூட மறைந்துவிட்டது.

இதனால்தான் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை உடனுக்குடன் புகாரளிக்க வேண்டும் என நான் கூறியது என்றார். இதையடுத்து தனக்கு இந்த பிரச்னையில் உறுதுணையாக நின்று மீண்டு வர உதவிய ஹோட்டல் நிர்வாக மேலாளரையே நான் திருமணம் செய்து கொண்டேன் எனக் கூறினார்.

உண்மையில் திரைத்துறையில் புகாரளிப்பது பெரியதொரு நடிகராகவோ, புகழ் செல்வாக்கு மிக்கவராகவோ இருந்தால், அந்தப் புகார்கள் எடுபடுவதில்லை என்பது விசித்ராவின் குற்றச்சாட்டு மூலம் தெரியவந்தது.

இதையடுத்து வந்த மாயா தனது தாய் இறக்கும் தருவாயில் அவர் காதில் கூறிய மாயச் சொல் அவரை மீட்டெடுத்ததாகக் கூறினார். இதை அவர் அழாமல் கூறியதில் இருந்தே அவர் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE