திருமணத்தில் எந்தெந்த செலவுகள் வொர்த் தெரியுமா?
வாழ்வில் ஒரு முறை நடக்கும் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுகிறேன் என்னும் பெயரில் நிறைய பேர் பணத்தை தண்ணீர் போல தேவையின்றி செலவழிப்பர் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள்.
அப்படி எந்த வகையில் செலவு செய்தால் நிதிச்சிக்கலில் சிக்காமல் தப்பிக்கலாம் என்று 125 திருமணங்களுக்கு ப்ரைட்ஸ் மெய்டாக இருந்த ஒருவர் பல டிப்ஸ்களை கூறியுள்ளார். அதனை த காரிகையின் சிறப்பு கட்டுரையில் தற்போது பார்க்கலாம்.
சுவையான உணவு – அதிக மெனு
எப்போதுமே உணவானது திருமணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே உணவு மற்றும் உணவு சமைப்பவரின் தேர்வில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
அதிக மெனு ஐட்டம்களை அடுக்கினாலே பிரமித்து போய் விடுவார்கள். செலவைக் குறைக்க பாரம்பரியமாக சமைக்கும் சமையலர்களை அழைப்பதை விட உங்களுக்கு மிக விருப்பமான ரெஸ்டாரண்டுகளில் உங்களுக்கு பிடித்த உணவுகளை பல்க்காக ஆர்டர் செய்து கொள்ளலாம்.
பொழுதுபோக்கு
தற்போதெல்லாம் உணவைப்போலே பொழுது போக்கும் ஒரு முக்கியமான மனம் கவரும் காரணியாக மாறிவிட்டன. போர் அடிக்கும் வெட்டிங்குகளை பலரும் விரும்புவதில்லை. எனவே திருமணத்தில் அவர்கள் நன்கு பொழுதை கழிக்க இரவு நேரத்தில் இசை, டிஜே, லைவ் பேண்ட் என்று வைக்கலாம். மிக அதிக பணம் கொடுத்து டிஜே வைப்பதை விட, எந்த பெர்ஃபார்மர் விருந்தினரை அதிக அளவு ஆட்டம் பாட்டத்தில் ஈடுபடச் செய்கிறார்? பொழுதுபோக்கு பக்கம் கூட்டத்தை கூட்டுகிறார் என்று கண்டு அவர்களை புக் செய்ய வேண்டும்.
ஓபன் பார்
மது வழங்கும் திருமண நிகழ்வாக இருந்தால் உள்ளரங்கில் மது விநியோகம் செய்யும் போது ஏராளமானோர் ஒன்றாக திரண்டு விடுவார்கள்.
இதைவிட திறந்த வெளியில் மதுபானங்களை வைக்கும் போது, பெண்கள், குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதற்காக சமூகத்துக்கு சங்கடப்பட்டு பலரும் மிகக் குறைவாகவே குடிக்க வாய்ப்பு உண்டு. மேலும் அதிக விலையுள்ள மது பாட்டில்களை அல்லாமல் சராசரி விலையுள்ள மதுவை வழங்கலாம். ஓரிரு மணி நேரங்களில் ஓபன் பாரை எடுத்து விடுவதும் செலவை குறைக்கும்.
அதற்கு மேல் தேவைப்பட்டால் அவர்களை விழா நடைபெறும் அரங்கில் உள்ள பாருக்கு சென்று மது அருந்திக் கொள்ளலாம் என்றும் அதற்கு அவர்களே பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தலாம்.
இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைக் காண இங்கு கிளிக் செய்யவும். . .