அன்று போலீஸ், இன்று கட்சிகள். வீரப்பன் மகளை துரத்துவது ஏன்?
தமிழகம்-கர்நாடகா என இரு மாநில போலீசருக்கும் தண்ணி காட்டிய வீரப்பன் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
இவர் தன்னைச் சுற்றி வாழும் மலை கிராம மக்களுக்கு பல நன்மைகளை செய்து இருந்ததால் அந்த மக்கள் மத்தியில் இன்றளவும் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.
வீரப்பன் கைகாட்டிய சின்னத்துக்கு மக்கள் வாக்குகளை குவித்து பிரம்மாண்ட வெற்றிகள் பெற்று தந்தனர். அப்போது வரும் வீரப்பனின் ஆதரவுக்காக தேர்தல் நடைபெறும் போது எல்லாம் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரை நோக்கி படையெடுத்த வண்ணம் தான் இருந்தனர்.
அத்தகைய செல்வாக்கு நிறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் மறைந்த பின்பும் அவரது செல்வாக்கு அவரது குடும்பத்தில் உள்ளவரிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அரசியல் கட்சிகள் தேடிச்சென்று அவரை வேட்பாளராக களம் இறக்கி பார்க்க நினைத்தது.
ஆனால் இப்படி தேடி தேடி பதவி வந்தும் வித்யாவும் அவரது சகோதரி பிரபாவும் ஓடி ஓடி ஒளிந்த நாட்களும் உண்டு.
வீரப்பனை வேட்டையாட காத்திருந்த போலீசார் அவர் எப்படியாவது தனது குடும்பத்தை சந்திக்க வருவார் என்று ஆர்வத்தில் அவர்களது குடும்பத்தை பல நாட்கள், பல மாதங்கள் என பின் தொடர்ந்தது.
அதிலும் குறிப்பாக வீரப்பனுக்கு மூத்த மகள் வித்யா ராணி என்றால் மிகவும் பிரியம். எப்படியாவது கல்வி பயில வேண்டும் என வெறியோடு பயணித்து வந்த வித்யா ராணிக்கு போலீசாரின் பின் தொடரும் நடவடிக்கைகள், உன்னிப்பான கவனிப்புகள், எங்கு சென்றாலும் அவர்கள் கண்ணில் படுவது என பல பிரச்சனைகள் இருந்தது. இதனால் அவர் சிறிது காலம் உறவினர் வீட்டில் தங்கி படிப்பை இழக்க நேரிட்டது.
முதலில் பொன் ராதாகிருஷ்ணன் இடம் அறிமுகமாகி பின் பாஜகவில் இணைந்து பாஜகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக உருவெடுத்த அவர் அந்த கட்சியில் தனக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி வெளியேறினார். பின்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் மக்களவைத் தேர்தல் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
வீரப்பன் கைகாட்டிய சின்னத்துக்கு ஓட்டுக்கள் குவிந்தது என்பது ஒரு காலமாக இருந்தாலும் வித்யா ராணி தற்போது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மக்கள் செல்வாக்கு ஒரு புறம் இருந்தாலும் அது வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.