நடிகை வனிதா விஜயகுமார் பல திருமணங்களை செய்து கொண்டதாக கேள்விப்பட்டது உண்டு. அவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவரான ஜோவிகா தான் தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்று இருக்கிறார். அங்கு அவர் பேசிய கல்வி என்ற முக்கிய மையப்புள்ளியை அடிப்படையாக வைத்து அவர் தெரிவித்த கருத்து அடித்தட்டு மக்களுக்கும் நடுநிலைகள் இருக்கும் மக்களுக்கும் கல்வி மீதான ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்று கடந்த முறை பிக் பாஸில் தோன்றிய கமல்ஹாசனும் நன்றாகவே தெளிவுபடுத்தினார்.

விசித்ரா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரள மாநிலத்தில் இருந்து வந்ததால் அவருக்கு இவ்வாறு தோன்றி இருக்கலாம் என்று அவர் விளக்கமும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஜோவிகாவின் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் இது குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா. அதை ஜோவிகாவின் தந்தையான ஆகாஷுக்கும் அனுப்பி அவரையும் பதிவிடுமாறு கூறியுள்ளார்.

இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் லைவிலும் தோன்றினர். அப்போது இது குறித்து விளக்கமும் அளித்தனர். இது தங்கள் மகள் பற்றிய படிப்பு விஷயம் என்பதால் இருவரும் சேர்ந்து முடிவெடுத்ததாக தெரிவித்தனர்.

புரியாத வயசு, சோ டிவோர்ஸ்

ஜோவிகாவின் தந்தை ஆகாஷ், ஜெய்னிதாவின் தந்தை ராஜனுடன் தான் இப்போதும் பேசிக் கொண்டிருப்பதாகவும் அப்போது வயசு பிரச்சினையால் விவாகரத்து செய்து விட்டோம் என்றும் வனிதா கூறினார். தற்போது பக்குவம் வந்துவிட்டதாகவும் வனிதா கூறி இருக்கிறார். என்ன இருந்தாலும் தாங்கள் பெற்றோர்கள் என்பதால் பேசிக் கொண்டிருக்க வேண்டிய சசூழலில் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே ஃபேமிலி சுற்றில் வனிதா வருவாரா? ஆகாஷ் வருவாரா? என்று எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மும்பை பாட்ஷா ஜோவிகா?

இதற்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டுக்குள் பேசிய ஜோவிகாவும் தான் 10 வயதிலேயே போலீஸ்காரரை எதிர்த்து பேசியதாகவும், 16 வயதில் மும்பையில் தனியாக வசித்ததாகவும், எவ்வளவோ கஷ்டங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்திருப்பதாகவும் கூறியிருந்தார். “ஒருவேளை மும்பையில் ஜோவிகா பாட்ஷாவாக இருந்திருப்பாரோ?” என்று ரசிகர்களும் விளையாட்டாக கேலி செய்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE