பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக வந்த வனிதா விஜயகுமார் அதன்பின் பல்வேறு படம் மற்றும் சின்னத்திரை வாய்ப்புகள் பெற்று ஜொலித்து வருகிறார். பிக் பாஸ் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. இதை அடுத்து அவரது மகளான ஜோவிகாவும் தற்போதைய 7வது சீசன் பிக் பாஸ் தமிழ் போட்டியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.

கடந்த சில ப்ரோமோக்களை முன்னோக்கி பார்த்தால், ஜோவிகா அதில் இடம் பெற்று இருப்பார். குறிப்பாக பிரதிப்பை எதிர்த்து பேசுவது உள்ளிட்ட பிரமோக்களில் அவர் காணப்பட்டார்.

ஆனால் வீக்கெண்டுகளில் கமல் வந்து பேசும்போது ஆடியன்ஸின் அப்ளாஸ் சத்தம் அவரது இயல்பை மாற்றி விட்டது என்று பலரும் நினைத்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை வனிதா தனது மகளுக்கு ஒரு ரகசிய ஹின்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்வீட் ஒன்று கொடுத்து அனுப்ப வேண்டும் என்று அனுமதி கேட்ட வனிதா விஜயகுமார் தனது மகளுக்கு ஸ்வீட் அனுப்பியதாகவும் அதனை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்குமாறு கடிதத்தில் எழுதி இருந்தார்.

அத்துடன் ரகசியமாக அவர் ஒரு டீசர்டையும் அனுப்பி இருக்கிறார். அதாவது “சிங்கம் சிங்கிளா தான் இருக்கும்” என அந்த டி-ஷர்டில் ஹின்ட் பிரின்டாக எழுதப்பட்டிருந்தது.

2-3 வாரங்களாக தனியே இருந்து நன்றாக விளையாடி வந்த ஜோவிகா, மாயா பூர்ணிமாவின் புல்லி கேங் உடன் சேர்ந்து பெயரைக் கெடுத்துக் கொண்டார்.

இதை தனது மகளுக்கு சொல்லாமல் சொல்லும் விதமாகத்தான் நடிகை வனிதா விஜயகுமார் அப்படி ஒரு டி-ஷர்டை அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

வேறு எந்த ஒரு கண்டஸ்டன்டுகளுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை வனிதா விஜயகுமாரின் மகளுக்கு மட்டும் காட்டுவதில் நியாயம் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதநிடைய இந்தியா கிலிட்ஸ்க்கு அவர் அளித்த பேட்டியில தனது மகள் தற்போது எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஓடி ஓடி விழுந்து கொண்டிருப்பதை பற்றி பேசினார்.தனது வீடாகட்டும் தனது தாயார் வீடாகட்டும் ஆலப்பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சென்றாலும் அவர் ஓடிக்கொண்டே தான் இருப்பார். பலமுறை விழுந்தும் இருக்கிறார். விழுந்து பல்லை கழட்டி கொண்டால் தான் அவள் திருந்துவார் போல. விடுங்கள் பட்டு திருந்தட்டும். அடிபட்டு திருந்தட்டும். என வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE