30 வயதை தொட்ட பின் 3 மாடி ஏறுவதற்கு மூச்சிரைக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சமூகத்தினர் 60 வயதில் 20 வயது போல் தோற்றம் கொண்டுள்ளனர். இவர்கள் யார்? எங்கு வசிக்கிறார்கள்? அதிக இளமை, ஆயுளின் ரகசியம் என்ன? என்பதை பார்க்கலாம்.

உலகம் முழுக்க மக்களின் மனதை கவர்ந்திருக்கும் பள்ளத்தாக்குகளில் ஒன்று ஹன்ஜா. இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு வழியாக அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் ஹன்ஜா என்று நகரில் அமைந்துள்ளது. மேல் , மத்தியம், கீழ் என 3 பகுதிகளாக ஹன்ஜா பள்ளத்தாக்கு பிரிக்கப்படுகிறது.

  • வெளிநாட்டவரை கவர்ந்திழுக்கும் சோலை

இங்கு உள்ள மக்களையும், அவர்களது வாழ்வியல் முறைகளையும், அறிந்து கொள்ள வெளிநாட்டில் இருந்து சுற்றுலா செல்வோரில் பலரும் தேர்வு செய்து செல்லும் இடம் இங்குதான். குறிப்பாக இங்கு வசிக்கும் ஹன்ஜா பழங்குடியினரும் அவர்களது வாழ்வியல் முறையையும் அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

  • அழகிய பெண்களின் சோலை

ஹன்ஜா பள்ளத்தாக்கு அழகிய பெண்களின் சோலையாக உள்ளது. உலகிலேயே அழகிய பெண்களின் பட்டியலில் ஹன்ஜா பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. இவர்கள் இயற்கையிலேயே அழகு மிக்கவர்கள். உடல் வலிமையும் மனவலிமையும் மிக்கவர்கள் ஹன்ஜா பழங்குடியினர்.

  • 150 ஆண்டு ஆயுள்

ஹன்ஜா பழங்குடியினர் 150 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர். அங்குள்ள சராசரி மக்களின் வயது 120 ஆக கணிக்கப்படுகிறது. இதற்கு இவர்கள் மருத்துவமனைக்கு செல்லாததும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இவர்களது வாழ்வியல் முறை, ஆயுளில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  • 60 வயதிலும் இளமை

ஹன்ஜா பழங்குடியினர் பெண்கள் 60 வயதிலும் 20 முதல் 25 வயது உடைய பெண்களின் தோற்றத்தை ஒத்துள்ளனர். அவர்கள், மிகவும் இளமையாக காணப்படுகின்றனர். இவர்களின் இளமை 80 வயது வரை நீடிக்கிறது.

  • 90 வயதிலும் தாய்மை

ஹன்ஜா பழங்குடியினர் 90 வயதிலும் தாய்மை அடையும் சக்தி உடையவர்கள். 90 வயதான போதும் கூட மிகவும் ஆரோக்கியமான குழந்தையை சுகப்பிரசவத்தில் பிரசவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு 150 ஆண்டுகள் வரை வாழ்க்கை இருப்பதால் அந்த குழந்தைக்கு இளமைக்காலம் முடிந்து 60 வயது என்ற முதுமையை தொடும் போதும் கூட அவர்கள் வாழ்கின்றனாம்.

  • இளமையின் சீக்ரெட் என்ன?

ஹன்ஜா பழங்குடியின மக்கள், இமயமலையிலிருந்து வரும் அதிக மினரல்ஸ் உள்ள தண்ணீரை பருகின்றனர். பனிப்பாறையில் இருந்து உருகிய தண்ணீருக்கு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாம். மக்கள் இயற்கையான தேனை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். ஏதேனும் விசேஷ நாட்களில் தான் இறைச்சியை எடுத்துக் கொள்கின்றனர். சாதாரண நாட்களிலும் கூட சாப்பிடும் சாப்பாட்டின் அளவு மிகவும் குறைவே. அதேபோல் பயணங்களுக்கு சைக்கிள், பைக், கார் பயன்படுத்துவதில்லை. 15 முதல் 20 கிலோமீட்டர் வரை ஒரு நாளைக்கு நடக்கின்றனர்.

  • எத்தனை பேர் வாழ்கின்றனர்

ஹன்ஜா பழங்குடியில் தற்போது 87,000க்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் நன்கு படித்தவர்கள். “புருஷோ” என இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மொழி “புருஷாஸ்கி” என அழைக்கப்படுகிறது.

நல்ல உணவைக் குறைவாக எடுத்து, அதிகம் நடந்து, ஆயுளை நீட்டித்திட “ The Karigai ”-யும் வாழ்த்துகிறது. இந்த பயனுள்ள தகவலை பலருக்கும் பகிருங்கள்!

Facebook
Instagram
YOUTUBE