“பேயின் சமையலறை,700 அடி பள்ளத்தாக்கு!” – குணா குகை ரகசியம்!
குணா குகை பற்றிய அறியாத தகவல்கள்
கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு மறுபெயர் “டெவில்ஸ் கிச்சன்”
இது பிரிட்டிஷாரால் கண்டுபிடிக்கப்பட்டது
1821-ல் BS வார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகையானது 90களில்தான் பிரபலமானது.
குணா திரைப்படம் இந்த குகைக்கு மிகப்பெரும் உலகப் புகழைத் தேடிக்கொடுத்தது.
அதற்கு மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மறுபிறவியை அளித்துள்ளது.
3 பில்லர் ராக்கால் உருவானதுதான் குணா குகை.
2230 மீட்டர் உயரத்தில் உள்ளது
குணா படத்துக்குப் பின் குகையைக் காண செல்கிறேன் பேர்வழியில் உயிரிழப்புக்கள் அதிகம் இருந்ததால் அங்கு இரும்புக்கம்பிகள் அமைக்கப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டது.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மொழி கடந்து பல ரசிகர்களை எட்டியுள்ளது. இதனால், குணா படமும், குணா குகையும் தற்போது பேசுபொளாகியுள்ளது.
குணா குகைக்கு சென்று மாட்டிக் கொண்ட நண்பனை மீட்க நண்பர்கள் போராடிய சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
குணா படம் வெளியான பின்பு குகைக்குப் பார்க்கச் செல்வதாகக் கூறி அதில் விழுந்து உயிரை இழந்தவர்கள் ஏராளம். அவர்களை அவர்களது நண்பர்கள் மீட்க முயன்றும் முடியாமல் போனது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் குட்டன் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் நண்பர் மிகவும் போராடி மீட்டிருப்பார். இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் பரபரப்பான காட்சிகளை வைத்து இந்தக் காட்சியமைப்பைப் பின்னியிருக்கிறார் இயக்குநர்.
பரபரப்பான பாடல், காதல், ஹீரோயின் இன்றி ஒரு படம் பெரியளவு விளம்பரமே இன்றி ஹிட் அடிக்கிறது என்றால் அது சாத்தியம்தான். ஹவுஸ்ஃபுல்லில் பல திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.
நடிகர் கமல்ஹாசனும் குணா குகை பற்றி ஒரு பேட்டியில் பேசியதன் சாராம்சம் இதோ.
“கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் டைரக்டர் சந்தானபாரதியும் 7 கி.மீ., அலைந்தும் திருப்தியான இடம் அமையாத நிலையில் ‘இன்னும் 1 கி.மீ., போய் பார்ப்போமே’ என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது.
அது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே போட்டோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது.” எனக் கூறினார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.