அந்த இடம் சுத்தமா இல்லன்னா இந்த புற்றுநோய் வருமாம். உஷார்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு என்பது, பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்திருக்காத பெண்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சத்தமே இல்லாமல் ஏராளமான பெண்களின் உயிரைக் கொத்துக் கொத்தாகப் பரிக்கிறது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இது, ஏற்கெனவே உலகில் லட்சக்கணக்கான பெண்களின் உயிரைப் பறித்து விட்டது. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெண்கள் இளம் வயதிலேயே உயிரிழக்கும் நிலை அதிகரித்துத் தான் வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 200 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறது. இதற்கு, பெண்களின் சுகாதாரமின்மையால் பெரும் பிரச்சனையைப் பெண்கள் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .

அறிகுறிகள்

  • மாதவிடாய் சமயத்தில் அதிக முதுகு வலி
  • திருமணத்துக்குப் பின்னதாக ஹார்மோன் மாற்றங்கள்
  • பிறப்புறுப்பில் நிறம் மாறியும் துர்நாற்றத்துடன் அதிகம் வெள்ளைப்படுதல்
  • பெண்களுக்கு கால்கள் மற்றும் பாதங்களில் அதிகப்படியான வலி, வீக்கம்
  • பாலியல் உறவில் நாட்டமின்மை
  • பாலியல் உறவில் வலி, பிறப்புறுப்பில் அதிக ரத்தப்போக்கு
  • ஒழுங்கற்ற மாதவிடாய் நாட்கள்
  • எவ்வித டயட், உடற்பயிற்சி செய்யாமல் திடீரென உடல் எடைக் குறைவது
  • கருப்பை வாயின் செல்கள் அசாதாரணமாகி, கட்டுப்பாட்டை மீறி வளரும் போது பசியின்மை

யாரை அதிகம் பாதிக்கும்?

  • பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்திருக்காத பெண்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்புக்கு வாய்ப்பு
  • இளம் வயதில் திருமணம் செய்துக் கொள்ளும் பெண்கள்
  • அதிக உடலுறவில் ஈடுபடுபவர்கள்
  • மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்பவர்கள்
  • அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொளும் தாய்மார்கள்
  • எச்.ஐ.வி பாதித்தவர்களுடன் உடலுறவில் ஏற்படும் பெண்கள்

பிற புற்று நோய்களைப் போல் ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாது. எனவே 35 வயதுக்கு மேல், பெண்கள் தாமாக முன்வந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது. அடடா, அரசு மருத்துவமனைக்கு செல்வதா? என நினைக்க வேண்டாம். மக்களுக்கு சேவையாற்றத்தான் அங்கு மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக 40 வயதில் இருக்கக்கூடிய பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது.

ஒருவேளை உங்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால் கவலை வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

சிகிச்சை முறைகள்

  • அறுவை சிகிச்சை
  • கதிர்வீச்சு
  • கீமோதெரபி

பயந்துகொண்டே இருப்பதை விட பரிசோதிப்பது நல்லது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE