பொதுவாக சோர்வாக உணரும் தருணங்களிலோ. பெண்களோ, கர்ப்பிணிகளோ, குழந்தை பெற்றவர்களோ, வயதுக்கு வந்த சிறுமிகளோ என யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படுவது உளுந்தங்களியும் நல்லெண்ணெயும் தான். இடுப்பு எலும்பு பலமாவதோடு, அதிக ஆரோக்யமும் தரும்.

“அய்யோ அது மிகவும் கடினமான விஷயம். செய்யவே முடியாது” என நமது தலைமுறையினருக்கு மனதில் ஏற்றி வைக்கப்பட்ட ஒரு பாடம். ஆனால் உங்கள் வீட்டில் இருவர் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் இந்த உளுந்தங்களயை மிக எளிமையாக செய்ய ஆரம்பிக்கலாம்.

ஏனெனில் உளுந்தங்களியைப் பொருத்தவரை அதை கைவிடாது கிளறுவது தான் கடினமான விஷயம். கை ஓய்ந்து போய்விடும். ரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே அக்கா தங்கையோ அம்மா மகளோ அல்லது மாமியார் மருமகளோ என இருவர் இருந்தால் கூட அவ்வளவு ஏன்? கணவன் மனைவியே இருந்தால் கூட இருவரும் ஒன்றாக சேர்ந்து ஆளுக்கு 5 நிமிடம் வாக்கில் கிளறிக் கொண்டிருக்க இது மிக எளிமையாக முடிந்து விடும் ஒரு ஆரோக்கியமான உணவு.

உளுந்தங்களி செய்ய தேவையான பொருட்கள்

ஒரு கப் கருப்பு உளுந்து

கால் கப் பச்சை அரிசி

ஒரு கப் வெல்லம் அல்லது கருப்பட்டி

ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய்

செய்வது எப்படி?

உளுந்தங்களிக்கு முதலில் கருப்பு உளுந்தை மிதமான சூட்டில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுபட்ட வாசனை வந்தவுடன் அதனை வேறு ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளலாம் அந்த தட்டு பிளாஸ்டிக் ஆக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஏற்கனவே உளுந்தை போட்டு வறுத்து எடுத்ததால் அதன் வாணலி மிகவும் சூடாக இருக்கும்.

எனவே பச்சரிசியை போட்டதும் அதை மிதமான சூட்டில் வறுத்து எடுப்பதை உறுதி செய்யுங்கள்.

தீய்ந்து போக வாய்ப்பு உள்ளது. தேவைப்பட்டால் சற்று நேரம் அடுப்பை அணைத்துவிட்டு அரிசியை வறுத்து விட்டு அதன் பின்பு மிதமான சூட்டில் பற்ற வைத்து தொடரலாம்.

கருப்பு உளுந்து பச்சரிசி ஆகிய இரண்டையும் நன்றாக ஆற வைத்த பின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும் .

இந்த பொடியை நன்கு சலித்து எடுத்த பின் திரி திரியாக இருக்கும் உளுந்தும் பச்சரிசியும் வெளியே வந்துவிடும்.

தற்போது இன்னொரு பாத்திரத்தில் சூடு செய்யும் தண்ணீருக்குள் ஒரு வெள்ளத்தை உடைத்து உள்ளே போடலாம்.

இது பாகு போன்று காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கரைந்தால் போதும்.

அதை எடுத்து வெள்ளத்தை நன்றாக வடித்துக் கொள்ள வேண்டும். அதில் தூசி இருந்தால் வெளியேறிவிடும்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்துக் கொள்ளவும். பாத்திரம் சூடானதும் அதில் வெள்ளத்தை ஊற்றவும்.

இதை அடுத்து வறுத்து அரைத்து சலித்த உளுந்து மற்றும் அரிசி பொடியை அதில் போட்டு நன்றாக கிளறவும்.

ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், அதில் கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

அதை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே கூறியது போல இருவர் ஒன்றாக சேர்ந்து சமைத்தால் உளுந்தங்களி எளிதாக செய்துவிடலாம்.

உளுந்துங்களியின் பதம் கெட்டியாக ஆக கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணையை ஊற்றிக் கொண்டே வரவேண்டும்.

ஒரு கட்டத்தில் களி ஒன்றாக அல்வா போல திரண்டு வந்து ஒட்டிக் கொள்ளும். ஆனால், எண்ணெய் தனியே பிரிந்து வரும்.

அப்போது லேசாக அதை கையில் எடுத்து உருண்டை பிடித்தால் கையில் ஒட்டாமல் ஒரே உருண்டை போன்ற வடிவில் வரவேண்டும்.

இப்படி வந்துவிட்டால் உளுந்தங்களி சாப்பிட பதமான பக்குவத்தில் வந்து விட்டது என்று அர்த்தம் .

தற்போது அடுப்பை அணைத்துவிட்டு உளுந்தங்களியை உருண்டை உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம்.

இனிப்பாக இருக்கும் என்பதால் அப்படியே பரிமாறலாம்.

வெல்லத்துக்குப் பதில், உப்பு போட்டிருந்தால் கருவாட்டு குழம்பு அல்லது மட்டன் குழம்பு அதற்கு சூப்பர் காம்போவாக இருக்கும்.

சைவப்பிரியர்கள் சட்னி, கத்தரிக்காய் அல்லது சுரைக்காய் தொக்கு சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் நன்றாக இருக்கும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE