வாழ்தல் என்பது சாதாரணமாக கடக்கும் மேகங்கள் போலத் தான். ஆனால் அதில் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

நம் முன்னோர், பண்டைத் தமிழர்கள் எவ்வளவு வீரத்தோடும் செருக்கோடும் கம்பீரத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்தார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்திருப்பது தான் அருங்காட்சியகங்கள்.

பொதுவாக ‘போரடிக்கும் இடம்’ என்று பலரும் தங்களது பயண பட்டியலில் அருங்காட்சியகங்களை சேர்க்க மாட்டார்கள்.

ஆனால், பண்டைத் தமிழரின் வீரம், மாண்பு, வாழ்வியல் அனைத்தையும் ஒருசேர தெரிந்து கொள்ளும் பொக்கிஷமாக இருக்கும் அருங்காட்சியகங்களின் மதிப்பு தெரிந்தவர்கள் கண்டிப்பாக அங்கு தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்று அங்கு உள்ள பொக்கிஷங்களை காட்டி இன்னது இது என சொல்லிக் கொடுப்பார்கள்.

இந்த பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல. அவர்களுக்கு அடுத்ததாக படிநிலையில் நிற்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு.

மாத்தி யோசிச்ச சுற்றுலாத் துறை!

அருங்காட்சியகங்களை இன்னும் எப்படி சுவாரசியமாக்கலாம்? மாணவர்களுக்கு அதன் அருமையை சொல்லிக் கொடுக்கலாம்? அங்கு அதிக மாணவர்களை வரவழைப்பது எப்படி? என யோசித்த தமிழக சுற்றுலாத்துறை, மாணவர்களுக்கு என ஒரு ஜாலியான ‘டிரஷர் ஹண்ட்’ ( பொக்கிஷத் தேடல்) போட்டியை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ப இரு பிரிவுகளாக பிரிந்து அருங்காட்சியகத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் பயன் தரும் வகையில் ‘டிரஷர் ஹண்டு’-களை நடத்துகிறது.

இது எங்கு? எப்போது? எப்படி? நடக்கின்றது என்ற முழு விவரமும் உங்களுக்கு வழங்குகிறது ‘த காரிகை.’

இதனை உங்கள் குழந்தைகளின் பள்ளி ஆசிரியர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தினால், நல்லதொரு வரலாற்றை அவர்கள் அறிந்து கொள்ளவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களோடு சிறந்த இடத்தில் இயற்கையோடு பொழுதை கழித்து, மூளைக்கு பயிற்சி கொடுக்கும் விளையாட்டுகளை உற்சாகமாக விளையாட வைக்க வழி வகுக்கும்.

அத்துடன் பணப்பரிசு வெல்லவும் வாய்ப்புள்ளது.

குழு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

முழு விபரம்:

இடம் – அருங்காட்சியகம், சென்னை

நாள் – 29.08.24 (வியாழன்)

வகுப்புப் பிரிவு – 2

6-8 வகுப்புக்கு காலை 10 மணி

9-12 பிற்பகல் 2 மணி

குழு உறுப்பினர்கள் – தலா 3 பேர்

அனுமதிக்கப்படும் குழு – ஒரு பள்ளிக்கு தலா ஒன்று (இரு பிரிவுகளில்)

Treasure hunt

காலம் – 60-75 நிமிடங்கள்

தேவையான திறமை

பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல்

கற்பனைத் திறன்

குழு செயல்பாடு

போட்டி விதி

பங்கேற்பாளர்கள் எப்பொழுதும் குழுவாக இருக்க வேண்டும்

போட்டியாளர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பார்கள்

போட்டி ஏற்பாட்டாளர்களின் முடிவே இறுதியானது

தகுதி நீக்க விதிகள்

செல்போன் பயன்படுத்துதல்

போட்டிகளில் ஏமாற்றுதல்

விதிகளை மீறுதல்

பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குதல்

கொண்டுவர வேண்டியவை

கொடுக்கப்படும் clue- க்களை எழுதிக் கொள்ள பேனா

Puzzle – களை சால்வ் செய்யவும் இது உதவும்

நீரேற்றத்தோடு இருக்க தண்ணீர் கொண்டு வந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும். (பள்ளி நிர்வாகத்துக்காக)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc3y5hlXgoAoJTkxiwD7_KJjblv2oKUSlCw07mj5qQEwu9P6Q/viewform

மேலும் விவரங்களுக்கு

[email protected]

Facebook
Instagram
YOUTUBE