நெய் சோறும் சிக்கன் தொக்கும். .
டின்னருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையா? பொதுவாக காலையில் வேலைக்கு போகும் பெண்களோ அல்லது அவசர கதியில் வேலைக்கு வீட்டில் இருப்பவரை அனுப்பும் பெண்களோ ஏதேனும் ஒரு மெனுவை காலைக்கும் மதியத்துக்கும் சமைத்துக் கொடுத்து அனுப்பி விடுவார்கள். ஆனால், இரவுக்கு தான் என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது.
ஏதேனும் ருசியாக சமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் என்ன செய்வது என்று தெரியாது. அப்படி இருக்கும்போது வெறும் சிக்கனை வைத்து சுவையான தொக்கு எப்படி செய்வது? என்பதை தற்போது பார்க்கலாம். இந்த தொக்கானது இட்லி, பரோட்டா, சப்பாத்தி, மட்டுமின்றி வெள்ளை சாப்பாடு, நெய் சோறு உள்ளிட்டவற்றுக்கும் அருமையாக இருக்கும்.
பவர் வீட்டில் ஷட் டவுன் அல்லது கரண்ட் போய்விட்டது என்றால் அரைக்கவே தேவையில்லாத சிக்கன் தொக்கு எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். இதனை பேச்சுலர்களாக இருக்கட்டும். பேயிங் கெஸ்ட் ஆக இருக்கும் மாணவர்களாக இருக்கட்டும் எளிதாக செய்யலாம்.
செய்ய தேவையான பொருட்கள்
சிக்கன் முக்கால் கிலோ
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லி ஒரு கையளவு
எப்படி செய்வது?
சிக்கனை நன்றாக கழுவி அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு பிரட்டி எடுக்கவும்.
ஒரு ஃப்ரையிங் பேனை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து வெட்டிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் ஃப்ரை செய்யவும்.
வேகவைத்து தோள் நீக்கிய தக்காளியை பியூரியாக கரைத்து அதில் ஊற்றவும்.
மசாலா பொருட்கள் அனைத்தையும் அதில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்.
2 நிமிடங்கள் கொதித்து மசாலாவின் பச்சை வாசனை போன பின்பு அதில் பொரித்த சிக்கனை போடவும்.
என்ணெய் பிரிந்து வரும்போது கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.