நாக்கில் எச்சில் ஊறும் தக்காளி ஊருகாய் செய்வது எப்படி?

0

இந்த உலகத்துலயே தக்காளி ஊருகாய் போல சுவையான ஐட்டம் எதுவும் இருக்க முடியாது. அதையும் சரியான புளிப்பு, உவர்ப்புடன் செய்தால் நாக்கில் எச்சில் ஊறிக் கொண்டே இருக்கும். அதன் செய்முறை என்னவென்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

  • பழுத்த தக்காளி – 1 கிலோ
  • எலுமிச்சை அளவு புளி
  • கடுகு
  • வெந்தயம்
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • 4 மிளகாய் வத்தல்
  • கறிவேப்பிள்ளை
  • 2 பல் பூண்டு
  • பெருங்காயம்
  • மஞ்சள் பொடி
  • எண்ணெய்
  • சிறிதளவு வெல்லம்

செய்முறை

தக்காளியின் காம்பு பகுதியை தனியாக எடுத்து போட்டுவிட்டு, தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், அடி கனமான கடாயில் தக்காளியை போட்டு வேக விடவும். எண்ணெய், தண்ணீர் ஏதும் ஊற்றத் தேவையில்லை. அவ்வப்போது கிண்டி விட்டுக் கொண்டே இருந்தால் தக்காளி தண்ணீர் விட்டு நன்கு வெந்துவிடும். அதில், ஊற வைத்த புளி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். மெல்ல மெல்ல தண்ணீர் வற்றி கொழ கொழவென வந்தவுடன் அதனை மிக்ஸி ஜாருக்கு மாற்றிவிடவும். ஆறியபின் நன்கு மைய்யாக அரைக்கவும்.

அதே கடாயில் 100 மில்லி எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடுகு, 20 பல் பூண்டு, 4 மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதன்பின், அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் சிம்மரில் வைக்கவும். பின்னர் அரைத்து வைத்த தக்காளியை அதில் போடவும். எண்ணெய் தாராளமாக ஊற்றினால், ஊறுகாய் நீண்ட நாள்களுக்கு கெடாமல் இருக்கும். நன்கு வற்றி ஊறுகாய் பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு வெல்லத்தை நுணுக்கி போட்டு இறக்கிவிட்டு கிண்டவும். வெல்லம் விரும்பாதவர்கள் சேர்க்கத் தேவையில்லை.

இந்த ஊறுகாயில் உப்பு, புளி, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என அனைத்துமே இருப்பதால் அருமையான சுவையுடன் இருக்கும். இதில், காரத்தை சிறிது குறைவாக போட்டுக் கொண்டால், இட்லிக்கு தொக்காகவும் சாப்பிடலாம். எப்படி இருந்துச்சுனு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *