உலகக் கோப்பை செஸ் போட்டியில் 64 கட்டங்களுக்கு காய்களை நகர்த்தி அதிரடி ஆட்டத்தைக் காட்டி வருகிறார் பிரக்ஞானந்தா. இவர் அடைந்த இடத்தை பலரும் புகழ்ந்து தற்போது பேசி வருகின்றனர். அதே அளவு அவரது தாயின் எளிமையையும் நிதானமான மனப்பாங்கையும் உலக ஊடகங்கள் பலவும் பேசி வருகின்றன. அந்த தமிழ்நாட்டுப் பெண் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சிறுவயதில் இருந்து டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டு தந்தையும் தாயும் தங்களது மகளுக்கும் மகனுக்கும் செஸ் விளையாட்டு போட்டியை அறிமுகப்படுத்தினர். இருவரும் மிக ஆவலோடு விளையாடத் தொடங்கினர். பின் நான்கரை வயதில் செஸ் பயிற்சியில் சேர்க்கப்பட்டார் பிரக்ஞானந்தா. அப்போது அவரது சகோதரி வைஷாலிக்கு வயது 7. தற்போது கிரான் மாஸ்டர் போட்டிகளில் சர்வதேச அளவில் அவரும் வலம் வருகிறார்.

கார்ல்சன்

சற்று விரைப்பான முகம், கடுகடுப்பான தோற்றம் , எதிரில் அமர்ந்து ஆடுபவர் முகம் கூட பார்க்காமல் ஜெயித்துக் கொண்டே போகும் தன்மை. இவற்றை மேக்னஸ்கார்ல்சன் கொண்டிருந்தார். ஆனால் அவரையே ஆட்டம் காண வைத்திருந்தார் பிரக்ஞானந்தா. இதனால் சர்வதேச அளவில் கவரப்பட்டார். தற்போது உலகக் கோப்பை செஸ் சாம்பியன்சில் டஃப் காம்பெடிசன் கொடுத்தார்.

யார் இந்த நாகலட்சுமி?

பிரக்ஞானந்தா ஒருபுறம் 64 கட்டங்களுக்குள் அதிரடியாக ஆடிக் கொண்டிருக்கும் போது சற்று ஓரமாக பூனம் புடவையில், சற்றும் ஆடம்பரம் இன்றி, மிக எளிமையாக நின்று சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அவரது தாய்.

உலக ஊடகங்கள் முன் பிரக்ஞானந்தா பேசும்போது அவர் ஓரமாக நின்று தனது மகன் பேசுவதை ரசித்துக்கொண்டிருந்தார். தன் மகன் சான்றோன் என கேட்கும் தருணமும் பெருமிதமும் அவர் கண்ணில் மிளிர்ந்தது.

இது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. எனவே சர்வதேச ஊடகங்கள் கூட யார் இந்த நாகலட்சுமி? என அவரைப் பற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பக்கத்துவீட்டு ஃபங்ஷனுக்கே பட்டுப்புடவையில் போகும் பலருக்கு மத்தியில், என்னதான் வெளிநாட்டுக்கு சென்றாலும், தன் மகன் உலக அளவில் புகழப்பட்டாலும், மிகவும் எளிமையான தோற்றத்தில் மக்களை கவர்ந்து வருகிறார் நாகலட்சுமி. தமிழகப் பெண்களின் ஒரு சராசரி தோற்றம் என்று வீட்டில் இருப்பது போன்று மிக நேர்த்தியாக அதே சமயம் மிக எளிமையாக உடையணிந்து மெல்லிய புன்னகையை மட்டும் உடுத்தி அழகாக வந்து கொண்டு இருந்தார் இந்த அம்மா!.

தாயின் ஊக்கம்

வெற்றி பெறத் தூண்டும் அளவு தனது தாய் தனக்கு அதிக அளவு ஊக்கமளித்து வருவதாக பிரக்ஞானந்தா ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தனது குடும்பம் தனது வெற்றிக்கும் தோல்விக்கும் என்றும் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE