விஜயை அரசியலுக்குள் இழுத்துவிட்டது எந்த கட்சி தெரியுமா?

பிற நடிகர்களைப் போன்றுதான் நடிகர் விஜய்க்கும் பெருமளவிலான ரசிகர் பட்டாளம். அதில் பலரும் அவரது ரசிகர் மன்றத்தில் சேர்ந்தனர். 2009 வரை அவர்கள் ஃபிளெக்ஸ் வைப்பது, பாலபிஷேகம் செய்வது என்றுதான் பணிகள் இருந்தன. அதற்குப் பின் தான் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் மக்கள் பணி செய்ய வேண்டும் என விஜய் பணித்தார்

இதைக் கட்டளையாக ஏற்ற அவரது ரசிகர்களும், தனிக் கொடி கட்டி, ரத்த தானம், அன்னதானம் போன்றவற்றை செய்து வந்தனர். அப்போது மன்றமானது விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் கையில் இருந்தது. விஜயகாந்த் உடனே அரசியலுக்கு வர எஸ்ஏ சந்திரசேகர் முயற்சித்தார். ஆனால், அவரது காய் நகர்வுகள் அரசியலில் எடுபடவில்லை.

இந்த நிலையில்தான், விஜயின் திரைப்படங்கள் அரசியல்வாதிகளின் சூழ்ச்சிச் சுழலில் சிக்கி ஆட்டம் காண ஆரம்பித்தது. 2011ல் விஜயின் ‘காவலன்’ திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானது. இருந்த போதும் அந்த வடுவானது விஜயை வெகுவாக பாதித்தது.

இதன் விளைவாக வற்புறுத்தலின் பேரிலோ என்னவோ தெரியில்லை. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ‘இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்’ என்றும் சொல்லப்பட்டது.

இதை தொடர்ந்து தலைவா திரைப்படத்தின் ஸ்லோகனாக இடம்பெற்ற டைம் டு லீட் அதாவது தலைமையேற்பதற்கான நேரம் வந்துவிட்டது என்ற வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிற மாநிலங்களில் வெளியானது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்த அச்சமயம் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். 'தலைவா' பிரச்சனையில் தலையிட்டு அம்மா ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார்.

பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்ட பின்பே படம் தமிழ்நாட்டில் வெளியானது.

லைகா நிறுவனம் கத்தி படத்தை தயாரித்ததன் காரணமாக பிரச்னை எழுந்தது. போர்க்கொடிகளையும் கடந்து, கத்தி வெளியானது. அதில், காத்தக் கூட வெச்சு வைத்து ஊழல் செய்ற நாடு இது என்ற வசனம் ஸ்பெக்ட்ரம் ஊழலை சுட்டிக்காட்டியதால் அதுவும் சர்ச்சையை எழுப்பியது.

விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கும், மருத்துவத் துறைக்கும் எதிராக வசனங்கள் இருந்தன. இது பாஜகவின் எதிர்ப்பை சம்பாதித்தது. அரசு தரும் இலவசங்கள் குறித்து சர்கார் படம் விமர்சித்திருந்தது

திரைப்பட நிகழ்ச்சிகளில், குட்டிக்கதைகள் மூலம் தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார் விஜய். சர்கார் பட ஆடியோ வெளியீடு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டது. அப்போது, முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன் என்று பதிலளித்தார்.

தமிழ்நாட்டை வழிநடத்த வேண்டும், தலைமை ஏற்க வேண்டும் என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அப்பாவுடன் ஏற்பட்ட முரண்பாடு

2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக அவரது தந்தை எஸ்ஏசி அறிவித்ததும், தனது கட்சிக்கும் தந்தைக்கு எவ்வித தொடர்புமில்லை என நடினர் விஜய் அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனது பெயரையோ, புகைப்படத்தையோ அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்

இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மீதே உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதிரவைத்தார் நடிகர் விஜய். இதையடுத்து அவராகவே அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, விஜயே தற்போது தனது கட்சியை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் ஆரம்பித்து பதிவு செய்கிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE