விஷமிருந்தால் போட்டுக் கொடுக்கும் முகலாயர் கால டம்ளர்

மன்னர்கள், உலகப் பெருந்தலைவர்கள், குறிப்பாக போர்களில் ஈடுபடுவோர்கள், போர்க்களம் தவிர தங்கள் உயிருக்கு எந்தவொரு வகையிலும் ஆபத்து நேரிடலாம் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். இதனால்தான் ஹிட்லர் கூட தனது உணவைப் பரிசோதிப்பதற்கும், தன்னைப்போன்றே டம்மியான ஆட்களையும் தயாரித்து உலவ விடுவார்.

அதேபோல்தான், இந்தியாவை ஆண்ட மன்னர்களும். பல கட்டப் பரிசோதனைகளுக்குப் பின்பே அவர்கள் உணவு அருந்துவார்கள். அந்தவகையில்தான் முகலாய மன்னர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது.

எனவே, ஒரு புதுவகையான பாத்திரம் ஒன்றை 400 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்துள்ளனர். சுமார் அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்தப் பாத்திரத்தில், தண்ணீர், பால், பாயாசம் என எதை வேண்டுமானாலும் ஊற்றிப் பருகலாம்.

ஆனால், அதில் துளியளவு விஷம் அல்லது பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்தால் கூட காட்டிக் கொடுத்துவிடும். ஏனெனில், அதில் ஒருவகையான கண்ணாடி உள் சேர்மானமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அந்தக் கண்ணாடியின் தன்மையின் படி, விஷமோ பூச்சிக் கொல்லி மருந்தோ கலந்திருந்தால் அது நீல நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ மாறிவிடும். இதைப் பார்த்த முகலாய மன்னர்களும் தாங்கள் அதில் தரும் தண்ணீரையோ பாலையோ பருகாமல் தப்பிவிடுவார்கள்.

இதுபோன்று பலமுறை அவர்களைக் கொல்ல சதி நடந்ததையும், இதை இந்த டம்ளர் முறியடித்ததையும் வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.

இந்த அழகிய டம்ளரில் மும்தாஜ், சாஜகான் மற்றும் புதினாவின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள புர்ஹான்பூர் தொல்லியல் ஆய்வாளர்களின் காட்சிப் பேழையில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த டம்ளர் எத்தனையோ பேரின் உயிரைக் காத்த பெருமையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE