அடித்துப் பிடித்து ஆஸ்கருக்குள் நுழைந்த 2018 Everyone is a Hero.

2018-ல் கேரளாவின் 4 மாநிலங்களைத் தவிர அனைத்துமே வெள்ளத்தில் மிதந்தது. மக்கள் அலறியடித்து உயிரைப் பிடித்துக் கொண்டு தப்ப முயன்றும் பேய் மழை விடாது போட்டு அழுத்தியது. உயிரா? உடமையா? என்ற போராட்டத்துக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஏராளமான உயிர்கள் பிரிந்தபோதும் மனிதநேயம் மலர்ந்தது. இதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான், 2018 Everyone is a Hero.

இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, நரேன் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஆசியாவின் சிறந்த நடிகருக்கான செப்டிமியஸ் விருதை டோவினோ பெற்றார்.

இந்த உலகை உலுக்கிய சம்பவத்தை மையமாக கொண்ட படம் தான் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இது ஒரு மல்டி ஸ்டாரர் படமாகவே இருந்தாலும், படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.30 கோடி தான். கிட்டத்தட்ட ரூ.200 கோடி வசூலை வாரிக்குவித்து பெரிய வெற்றி பெற்றது. மக்களை வெகுவாக பாதித்த கதை என்பதால், மக்கள் இப்படத்தைப் பார்க்க அதிக ஆர்வம் காட்டினர். படத்தைப் பார்த்த பின் படக்குழுவைப் பாராட்டியும் தள்ளினர். உண்மைச் சம்பவமாக இருந்ததால் ஆதரவு அதிகரித்து இருந்தது.

இந்த படத்தின் பெயர்தான் படத்தின் கதை. 2018 Everyone is a Hero. அதாவது, 2018ல் கேரளாவில் ஏற்பட்ட அந்த துயர சம்பவத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட, பங்கெடுத்த அனைவருமே ஹீரோக்கள்தான் என்னும் கருத்தை இந்த படம் குறிக்கிறது.

2018 Everybody is a hero திரைப்படம் ஆஸ்கார் விருதுகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுவதாக இந்தியாவின் திரைப்பட கூட்டமைப்பு சங்கம் அறிவித்திருக்கிறது. தி கேரளா ஸ்டோரி, ஆகஸ்ட் 16 1947, ராக்கி ஆர் ராணி போன்ற 22 படங்களையும் கருத்தில் கொண்டனர். எனினும், மற்ற நாடுகளில் இருந்து வரும் படங்களுடன் மோதும் அளவிற்கு 2018 Everybody is a hero படத்தின் கதையும் திரைக்கதையும் கூறப்பட்டிருக்கும்.

இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் இந்த மலையாள படம் கமர்சியல் ரீதியாகவும், மக்களின் நிஜ வாழ்க்கையை கூறியது. அதேபோல, இந்த படத்தை ஆஸ்கர் விருது வழங்க தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதே மலையாள ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE